மின்சார சபை ஊழியர்கள் ஸ்டிரைக் : “இப்போது மின் விநியோகம் எங்காவது தடைப்பட்டால் நாளை மறு தினமே திருத்த வருவார்களாம்..!!

· · 315 Views

தற்போது முதல் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்  வேலை  நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு  வருவதாக செய்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

 

 

வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் இரு தினங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் தொடர் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாகவும் அவ்வொன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

 

 

இது தொடர்ப்பாக இலங்கை மின்சார சபையின் புத்தளம்  பிராந்திய  அதிகாரி  ஒருவரோடு  தொர்பு  கொண்டு  கேட்ட போது , ” நாங்கள்  அனைவரும் இந்தப்  போராட்டத்தில்  கலந்து  கொண்டு  இருக்கின்றமையால்  பொதுவான மிசார இடையூறுகளோ  அல்ல்து  தனியார்  மிசார இடையூறுகளோ  ஏற்படின்  அதற்க்கான  எந்தப்  பொறுப்புக்  கூறலையோ அல்லது  திருத்த  வேளைகளிலோ  ஈடு பட  மாட்டோம்  என்று  தெரிவித்தார்.

 

 

இந்த  சமயத்தில்  ஏதும்  மின்சார  தடைகள்  ஏற்படின்  அது  நாளை  மறு  தினமே  சரிபார்க்கப்படும்  என்றும் அந்த பெயர் குறிப்பிட  விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

 

 

பொதுவாக  புத்தளம்  நகரில்  மழைக்  காலங்களின்  போது  அடிக்கடி  மின்  விநியோகம்  தடைபடுவது  வழமை  என்பது குறிப்பிடத் தக்கது.

 

  • எடிசன்

 

 

Leave a Reply

Your email address will not be published.