மாதம் 48 லட்சம் சம்பளம் !! அரபு மொழி தெரிந்தவர்களுக்கு துபாயில் அசத்தல் வேலை வாய்ப்பு – விபரம் உள்ளே

· · 1131 Views

 

துபாய் பணக்கார நகரம். இங்கே யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.

 

 

 

துபாயில் யாசகம் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் இவர்கள் சாதாரணமான யாசகர்கள் அல்லர். தொழில்முறை யாசகர்கள். வெளிநாடுகளில் இருந்து 3 மாத விசாவோடு துபாய்க்கு வருகிறார்கள். மிக நாகரீகமாக உடை அணிகிறார்கள். பார்ப்பதற்குப் பணக்காரர்கள் போலவே தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் யாசகம் கேட்பதில்லை. பணக்காரர்களிடம் மட்டுமே கேட்பார்கள்.

 

 

 

‘நான் பணக்காரன். கையில் இருந்த பணமும் வங்கி அட்டைகளும் திருடப்பட்டுவிட்டன. என் உறவினர் மயங்கிக் கிடக்கிறார். என் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது..’ இப்படி ஏதாவது ஒரு கதையை நெஞ்சை உருக்கும் விதத்தில் சொல்வார்கள்.

 

 

17 ஆயிரம் ரூபாயை உதவியாகக் கேட்பார்கள். துபாய் செல்வந்தர்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை என்பதால், கொடுத்துவிடுகிறார்கள். மசூதி வாசலில் யாசகம் கேட்டால், கேள்வி கேட்காமல் கேட்ட தொகை கிடைத்துவிடுகிறது. அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாயைச் சம்பாதித்துவிடுகிறார்கள்.

 

 

 

இப்படி ஒரு மாதத்தில் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மூன்று மாதங்களில் பணம் சேர்ந்தவுடன் துபாயிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். பணம் செலவான பிறகு, மீண்டும் துபாய் நோக்கி வருகிறார்கள். தொழில்முறை யாசகர்களைக் கண்டுபிடிப்பது கடினம். அப்படியும் 65 யாசகர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். எப்படியோ அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.

கோடீஸ்வர யாசகர்கள்!

 

Leave a Reply

Your email address will not be published.