மறைந்த பெருந் தலைவர் அஷ்ரபின் மரணம் தொடர்பான இறுதி அறிக்கை இல்லை..!!சுவடிகள் திணைக்களம் கை விரித்தது – பெருந்தலைவரின் மரணம் சந்தேகத்திற்குரியது..?

· · 346 Views

முன்னாள் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பிலான இறுதி அறிக்கை தமக்கு கிடைக்கவில்லையென சுவடிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரண அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யும், தகவல் அறியும் ஆணைக்குழு முன்னிலையில் சுவடிகள் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரண அறிக்கை தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று (20) நடைபெற்றது.

 

 

 

ஆணைக்குழுவின் அழைப்பிற்கு ஏற்ப பிரசன்னமாகியிருந்த சுவடிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மரண அறிக்கை தொடர்பிலான விடயங்களை எடுத்துக்கூறினர்.

 

 

 

தம்மிடம் இல்லாத ஒரு ஆவணத்தை எவ்வாறு வழங்க முடியும் எனவும் திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

 

 

நேற்றயை அமர்வில் முறைப்பாட்டாளரான முன்னாள் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவூதும் பிரசன்னமாகியிருந்தார்.

 

 

 

 

முக்கியமான ஆவணங்கள் காணாமற்போயுள்ளமை மூலம் தலைவர் அஷ்ரபின் மரணத்தில் தமக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி, கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கிப் பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் அரநாயக்க பகுதியில் வெடித்துச் சிதறியதில் எம்.எச்.எம். அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

 

 

 

அதன் பின்னர் அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 2001 ஆம் ஆண்டு தனிநபர் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

 

 

 

 

ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.கே.ஜி. வீரசேகரவின் தலைமையிலான ஆணைக்குழு புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கடந்த 16 வருடங்களுக்கு மேலாக அந்த ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் எவையும் பொதுமக்களுக்கு வௌியிடப்படவில்லை.

 

 

 

 

 

இந்த பின்புலத்திலேயே 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்பட்ட தகவல் அறியும் சட்டத்தின் படி, ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.