மருமகனுக்கு 2 கோடி 30 லட்சம் பெறுமதியான பென்ஸ் காரை அன்பளிப்புச் செய்யப்போகும் திடீர் பணக்கார அமைச்சர்

· · 1155 Views

500 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் இறங்கியுள்ளமை குறித்து கொழும்பு  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுருக்கின்றன.

 

 

 

 

வீட்டைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ள இந்த அமைச்சர் தனது மருமகனுக்கு 23 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் கார் ஒன்றை அன்பளிப்புச் செய்யத் தயாராகி வருவது குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

 

குறித்த இந்த அமைச்சர் அண்மையில் தனது மனைவியுடன் கொழும்பு 07 இல் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையமொன்றுக்குச் சென்று E பிரிவின் நவீன பென்ஸ் கார் ஒன்றைக் கொள்வனவு செய்ய தயாராகியுள்ளர்.

 

 

 

 

மூன்று வருடங்களுக்கு முன்னர் அதாவது 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் அமைச்சுப் பதவி இல்லாதிருந்த போது, அவர் போக்குவரத்திற்காக ஹொண்டா ரக மோட்டார் சைக்கிள் ஒன்றையே பயன்படுத்தி வந்துள்ளார்.

 

 

 

 

இவ்வாறு இருந்த ஒரு நபர் அமைச்சுப் பதவி கிடைத்த பின்னர் மூன்று வருடங்களுக்குள் 500 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றைக் கொள்வனவு செய்வதற்கும், 23 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் கார் ஒன்றை அன்பளிப்புச் செய்வதற்கும் தயாராகி வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.;;

 

 

 

 

இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுடன், அமைச்சர் ஒருவர் திடீர் பணக்காரர் ஆகியது எவ்வாறு என்பதை வெளிப்படுத்த வேண்டும் என ஊடகங்கள்  வேண்டியுள்ளன.

 

 

 

 

இதனிடையே, குறித்த அமைச்சருக்கு, அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்ட பின்னர், பெருமளவில் நிதி புழங்கும் அமைச்சொன்றை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.