மதத்­த­லை­வர்கள் – ஜனா­தி­பதி சந்­திப்பு : ” ஞான­சார தேரர் ஏன் அழைக்­கப்­பட்டார்?..ஞான­சா­ர ­தேரர் என்ன கூறினார்?..ஏன் இந்த மத­வாதம்?

· · 983 Views

A.R.A.Fareel

நாட்டின் தெருக்­க­ளிலும் ஊடக மாநா­டு­க­ளிலும் மற்றும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் இந்­நாட்டை தாய்­நா­டாகக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் அவ­ம­திப்­புக்­குள்­ளா­னது.

பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் குறிப்­பாக பொது­ப­ல­சேனா இந்த செயற்­பா­டு­களைத் திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்­தது.

meetingggggggggg1

முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாகக் கருதும் புனித குர்­ஆனை மாத்­தி­ர­மல்ல அதையும் கடந்து அல்­லாஹ்வின் மீதும் அவர்கள் விமர்­ச­னங்­களை நிறைத்­தார்கள். நிந்­தித்­தார்கள். இந்­நி­லையில் நாட்டில் மீண்டும் ஓர் இன முறு­கலை ஏற்­ப­டுத்தி அசா­தா­ரண நிலையை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இதில் அர­சியல் பின்­பு­லமும் இருக்­கி­றது என உளவுப் பிரி­வினர் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யதன் பின்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து மதத்­த­லை­வர்­க­ளையும் அனைத்து மதங்­க­ளுக்கும் பொறுப்­பான அமைச்­சர்­க­ளையும் தனது செய­ல­கத்­துக்கு அழைத்து கலந்­து­ரை­யா­டினார்.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் உறுதி செய்­வ­தற்­கென்று தனி­யான அமைச்­சொன்று நிறு­வப்­பட்­டது.

அமைச்சுப் பொறுப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்றுக் கொண்டார். இரா­ஜாங்க அமைச்­ச­ராக ஏ.எச்.எம்.பௌசி நிய­மிக்­கப்­பட்டார். இதற்­கான செய­லகம் ஜனா­தி­ப­தியின் அலு­வ­ல­கத்­திலே அமைந்­துள்­ளது.

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் திட்­டப்­ப­ணிகள் என்ன என்­பது இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது, ‘அடிப்­படை உரி­மை­களை மதிக்கும் சட்ட விதிகள், சமத்­துவம் மற்றும் பன்­மைத்­து­வத்­தினைப் பாது­காத்து சகல பிர­ஜை­களும் தமது இனம், சமயம், மொழி, சாதி,வயது, பால், பாலினம், பிறப்­பிடம் மற்றும் அர­சியல் கொள்­கைகள் என்­ப­வற்­றினை வேற்­று­மை­யாகக் கொள்­ளாது கெள­ர­வ­மாக வாழ்­வ­தற்குத் தேவை­யான சமூகம் ஒன்­றினை மேம்­ப­டுத்தல்’ என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மதத்­த­லை­வர்கள் – ஜனா­தி­பதி சந்­திப்பு

நாட்டில் தொடர்ந்து இனங்­க­ளுக்கும் சம­யங்­க­ளுக்கும் இடையில் முறுகல் நிலை உரு­வா­கிய நிலை­யிலே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மதத்­த­லை­வர்­க­ளையும் அனைத்து மதங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­சர்­க­ளையும் சந்­தித்தார். இந்தச் சந்­திப்பு கடந்த 6 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய, சிங்­ஹலே போன்ற கடும் போக்­கு­வாத பௌத்த அமைப்­புகள் சில­வா­ரங்­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கண்­டியில் நடத்­திய ஆர்ப்­பாட்டம், ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா அத் முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொண்ட ஆர்ப்­பாட்டம், கடந்த 3 ஆம் திகதி குறிப்­பிட்ட பௌத்த கடும் போக்கு அமைப்­புகள் மட்­டக்­க­ளப்­புக்கு மேற்­கொள்ள முற்­பட்ட விஜயம், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய அதி­பதி அம்­பிட்­டிய சுமணரத்ன தேரரின் இனங்­களை வெறுப்­பூட்டும் பேச்­சுக்­களும் செயற்­பா­டு­க­ளுமே ஜனா­தி­ப­தியை உட­ன­டி­யாக செயலில் இறக்­கின எனக்­கூ­றலாம். நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே ஒரு அச்­ச­நிலை உரு­வா­கி­யுள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் அந்தப் பீதியைக் களைவ­தற்­கா­கவே ஜனா­தி­பதி இம்­மு­யற்­சியை மேற்­கொண்­டார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் பௌத்த விவ­கார அமைச்சர் விஜே­தாச ராஜபக்ஷ, கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க மற்றும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தலை­மையில்  உலமா பிர­தி­நி­திகள், தேசிய சூரா சபையின் தலைவர் தாரிக் முஹம்மத், வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீல், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நௌசாட், பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர், சிங்­கள ராவ­யவின் செய­லாளர் மாகல்­கந்த சுதந்த தேரர், அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர், மல்­வத்த மகா நாயக்க தேரரின் பிர­தி­நி­திகள், இந்து மதத்­த­லைவர், கிறிஸ்­தவ மதத்­த­லைவர் ஆகியோர் பங்கு கொண்­டனர்.

இந்து மதத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொள்­ள­வில்லை. அவ­ரது அமைச்சு தொடர்­பான வரவு செலவுத் திட்ட விவாதம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றதால் அவர் பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய தினம் கலந்து கொண்­டி­ருந்தார்.

ஞான­சார தேரர் ஏன் அழைக்­கப்­பட்டார்?

இன்று நாட்டில் சர்ச்­சை­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் பல­வ­ழக்­கு­களில் பிர­தி­வா­தி­யாக இருக்கும் ஞான­சார தேரர் சர்­வ­மதத் தலை­வர்­களின் கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏன் அழைக்­கப்­பட்டார் என்று இன்று பர­வ­லாக வின­வப்­பட்டு வரு­கி­றது. ஞான­சார தேரர் நீதி­மன்­றத்­தையே அவ­ம­தித்த ஒருவர்.

அண்­மையில் பகி­ரங்­க­மாக நீதி­மன்ற உத்­த­ர­வினைக் கிழித்­தெ­றிந்­தவர். மட்­டக்­க­ளப்­புக்கு அவர் மேற்­கொண்ட விஜ­யத்­துக்­கான தடை­யுத்­த­ர­வி­னையே அவர் கிழித்­தெ­றிந்தார். அவ்­வாறு நீதி­மன்ற உத்­த­ரவு கிழித்­தெ­றி­யப்­பட்­டமை நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகும்.

தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஞான­சார தேரர் குர்­ஆனை அவ­ம­தித்­தவர். அல்­லாஹ்வை நிந்­தித்­தவர் நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக விசா­ரணை செய்­யப்­பட்டு நிபந்­த­னை­களின் கீழ் பிணையில் விடப்­பட்­டவர். அளுத்­க­மையில் கொலை­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் சொத்­துகள் அழி­வு­க­ளுக்கும் கார­ண­மாக இருந்­தவர்.

இவர் ஏன் நல்­லி­ணக்க முன்­னெ­டுப்­பு­க­ளுக்­காக அழைக்­கப்­பட்டார்? நாட்டில் நிலவிக் கொண்­டி­ருக்கும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான அசா­தா­ரண நிலை­யினை தவிர்ப்­ப­தற்கு இவரால் ஆலோ­ச­னைகள் வழங்க முடி­யுமா? என்று பல­ராலும் விவா­திக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­ப­தியின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் அசா­தா­ரண நிலை உரு­வா­கு­வ­தற்குக் கார­ண­மா­ன­வரே இவ­ரல்­லவா? ஏன் இவர் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்டார்?  என்று முஸ்லிம் சமூ­கத்தின் புத்­தி­ஜீ­விகள் மாத்­தி­ர­மல்ல. தமிழ் சமூ­கத்­தி­லி­ருந்தும் கேள்வி எழுப்­பப்­ப­டு­கி­றது. பிணை நிபந்­த­னை­களை மீறினார் என்­ப­தற்­கா­கவே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ராஸிக் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

ஆனால் பிணை நிபந்­த­னை­களை தொடர்ந்து மீறி­வரும் ஞான­சார தேர­ருக்கு சட்டம் ஏன் சலுகை வழங்­கி­யுள்­ளது? ஏன் அவர் கைது செய்­யப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டு­கி­றது. இந்­நாட்டில் காவி­யு­டைக்கு ஒரு சட்டம் ஏனை­ய­வர்­க­ளுக்கு மற்­றொரு சட்­டமா? என்று பெரும்­பான்­மையோர் விமர்­சித்து வரு­கி­றார்கள்.

சர்­வ­மதத் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஞான­சார தேரர் அழைக்­கப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பலத்த கண்­டனம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீ.ல.மு.கா.செய­லாளர் ஹசன் அலி 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­மத தலை­வ­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் அழைக்­கப்­பட்­ட­மைக்கு கடும் எதிர்ப்­பினை முஸ்லிம் சமூகம் சார்பில் வெளி­யிட்­டுள்ளார்.

நீதி­மன்ற உத்­த­ர­வினை பகி­ரங்­க­மாக பலரும் பார்த்­தி­ருக்க கிழித்­தெ­றிந்த ஒருவர் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது. நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவும் இது நீதி­மன்­றினை அவ­ம­தித்­த­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

நீதி­மன்­றினை முன்பு அவ­ம­தித்­த­தற்­காக அவர் நீதி­மன்­றினால் எச்­ச­ரிக்­கப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்­துள்ளார்.

ஞான­சார தேரர் பல வழக்­கு­களின் பிர­தி­வாதி. அவ­ருக்கு ஒரு போதும் அங்­கீ­காரம் அளிக்க முடி­யாது. இவர் கைது செய்­யப்­பட வேண்­டி­யவர். விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்­டி­யவர். நாட்டில் இடம்­பெற்ற இன­ரீ­தி­யான முறு­கல்­க­ளுக்கு இவரே கார­ண­மா­னவர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்தப் பின்­ன­ணியில் இவர் அழைக்­கப்­பட்டார் என்­பதைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

தே.ஐ.மு. தலைவர் அசாத்­சாலி

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சா­லியும் ஞான­சார தேரர் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்­ட­மைக்கு பலத்த கண்­டனம் தெரி­வித்­துள்ளார். நாட்டில் தற்­போது இனங்கள், மதங்­க­ளுக்­கி­டையில் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஒன்று கூட்­டிய சர்­வ­மதத் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஞான­சார தேரர் அழைக்­கப்­பட்­டி­ருக்கக் கூடாது.

ஞான­சார தேரரை வைத்­துக்­கொண்டு நல்­லி­ணக்­கத்­தையும், சக­வாழ்­வையும், தேசிய ஒற்­று­மை­யையும் பேசு­வதில் பய­னில்லை. நீதி­மன்­றத்தின் பிணை நிபந்­த­னை­களை மீறி சுதந்­தி­ர­மாக நட­மா­டி­வரும் ஒருவர் அழைக்­கப்­பட்­டமை அவ­ருக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­த­தற்குச் சம­மாகும். இது அநீ­தி­யாகும். சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

கைது செய்­யப்­பட்டு சிறையில் வைக்­கப்­ப­ட­வேண்­டிய ஒரு­வ­ருடன் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் பற்றிப் பேச முடியும். இது தவ­றாகும். எவ­ரது ஆலோ­ச­னையின் பேரில் ஞான­சா­ர­தேரர் அழைக்­கப்­பட்டார்? எந்த நோக்­கத்­திற்­காக அழைக்­கப்­பட்டார் என்­பது நாட்­டிற்குத் தெளி­வுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றார்.

வக்பு சபை தலைவர் எஸ்.எம்.எம்.யாசீன்
குறிப்­பிட்ட சர்­வ­மதத் தலை­வர்­க­ளு­ட­னான ஜனா­தி­ப­தியின் கலந்­து­ரை­யா­டலில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீனும் பங்கு கொண்­டி­ருந்தார்.

அவர் கருத்து தெரி­விக்­கையில்;
இன நல்­லி­ணக்கம் மற்றும் நாட்டில் நிலவும் இனப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பான ஜனா­தி­ப­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு நானும் அழைக்­கப்­பட்­டி­ருந்தேன். ஆனால் ஞான­சார தேர­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என அழைப்­பா­ளர்கள் தெரி­விக்­க­வில்லை. அல்­லாஹ்வின் ரசூ­லையும், அல்­லாஹ்­வையும், புனித திருக்­குர்­ஆ­னையும் அவ­ம­தித்துப் பேசிய ஞான­சார தேர­ரிடம் நல்­லி­ணக்­கத்­தையும், இன நல்­லு­ற­வி­னையும் எதிர்­பார்க்க முடி­யுமா? அவர் நீதி­மன்­றத்­தி­னையே அவ­ம­தித்­தவர்.

பல வழக்­கு­களில் ஆஜ­ரா­க­வேண்­டிய பிர­தி­வாதி. இவர் அழைக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் ஏதோவோர் சக்தி இருக்­கி­றது என்றே எண்ணத் தோன்­று­கி­றது இவ­ருக்கு முன்னால் அமர்ந்து உல­மா­சபை என்ன கருத்து கூற­மு­டியும். உலமா சபையை தீவி­ர­வா­திகள், ஐ.எஸ் அமைப்­புக்கு ஆத­ர­வா­ளர்கள் என்று விமர்­சித்­தவர் அல்­லவா இவர்? சக­வாழ்வு, இன ஐக்­கியம் பற்றி இவ­ருடன் பேச முடி­யுமா? ஞான­சார தேரரும் கலந்து கொள்­கிறார் என்று எமக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்றார்.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன்
நாட்டில் தற்போது நிலவும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அழைக்கப்பட்ட மதத்தலைவர்களுள் ஞானசார தேரரும் உள்வாங்கப்பட்டமை தவறாகும். இன நல்லுறவினை இல்லாமற் செய்வதையே தனது கடமையாகக் கொண்டிருக்கும் ஒருவருடன் எவ்வாறு இன ஐக்கியம் பற்றி கலந்துரையாட முடியும்.

அவர் நீதிமன்றங்களில் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட பிரதிவாதி. நீதிமன்றினை அவமதித்தவர். குர்ஆனை நிந்தித்தவர்.

அல்லாஹ்வையே சவாலுக்கிழுத்தவர். இவ்வாறான ஒருவர் நிராகரிக்கப்படவேண்டியவர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் காவியுடை அணிந்த மாத்திரத்தில் ஒருவர் மதத் தலைவராகிவிடமுடியாது. அவரது வாழ்க்கை முறை, நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவேண்டும் என்றார்.

ஞான­சா­ர­தேரர் என்ன கூறினார்? 
சர்­வ­மத அமைச்­சர்­களும் சர்வ மதத்­த­லை­வர்­களும் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வந்­த­மர்ந்து சுமார் 10 நிமி­டங்கள் தாம­தித்தே ஞான­சார தேரர் அவ்­வி­டத்தை அடைந்தார். அவ­ருக்கு முன்பே அஸ்­கி­ரிய மாக­நா­யக்க தேரர், மல்­வத்த மகா­நா­யக்க தேரரின் பிர­தி­நிதி, சிங்­கள ராவ­யவின் தலைவர், செய­லாளர் வந்து அமர்ந்­தி­ருந்­தனர்.

அவர் அங்கு ஆற்­றிய உரை, தெரி­வித்த கருத்­துக்கள் தன்­னையும் தமது இயக்­கத்­தையும் நியா­யப்­ப­டுத்தும் வகை­யிலே அமைந்­தி­ருந்­தன. அவர் தன­து­ரையில் ‘நாங்கள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையோ தமி­ழர்­களின் கோவில்­க­ளையோ தாக்­க­வில்லை. பௌத்த சம­யத்­துக்கு ஏனைய மதத்­த­வர்­களை நாம் மதம் மாற்­ற­வில்லை. நாம் நல்­லி­ணக்­கத்­தையே விரும்­பு­கிறோம். பௌத்தம் நல்­லி­ணக்­கத்­தையும் கரு­ணை­யையும் போதிக்­கி­றது.

என்­றாலும் முஸ்­லிம்கள் தங்­க­ளது புனித தலங்­க­ளாகக் கொண்­டுள்ள சில இடங்கள் தொடர்பில் சில சிக்­கல்கள், பிரச்­சி­னைகள் எமக்கு இருக்­கின்­றன. பௌத்த மர­பு­ரி­மைகள் ஏனைய மதத்­த­வர்­களால் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது பாரம்­ப­ரிய பௌத்த வர­லாற்­றுக்கு சான்­றா­க­வுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்கள் முஸ்­லிம்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. கூர­கல, தெவ­ன­கல, முகுது விகாரை, புனித பூமி காணிகள் முஸ்­லிம்கள் வச­முள்­ளன. இவை தொல்­பொருள் ஆய்வு பிர­தே­சங்­க­ளாகும். இந்த ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக தொல்­பொருள் சட்டம் அமு­லாக்­கப்­பட வேண்டும்.

முகுது விகா­ரைக்குச் சொந்­த­மான காணி 276 ஏக்­கர்­க­ளாகும். இந்த 276 ஏக்­கரில் 3 ஏக்­கரைத் தவிர எஞ்­சிய காணி முஸ்­லிம்­களால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அக்­கா­ணியில் முஸ்­லிம்கள் வீடு­களை நிர்­மா­ணித்­துள்­ளார்கள்.

முகுது விகாரை பன்­ச­லைக்கு செல்­வ­தற்­கான காணியும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. மூடப்­பட்­டுள்­ளது. தற்­போது பன்­ச­லைக்கு செல்­வ­தற்கு கட­லோரப் பாதையே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முகுது விகாரை பன்­ச­லைக்­கான பெயர்ப்­ப­ல­கையும் ஏனைய இனத்­த­வர்­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான பிர­தே­சங்கள் தொல்­பொருள் சட்­டத்­தினால் பாது­காக்­கப்­பட வேண்டும் என்றார்.

சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர்

சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரரும் கூட்டத்தில் கருத்­து­களை முன்­வைத்தார். இன்று நாட்டில் பௌத்­தத்­துக்கும் பௌத்த மக்­க­ளுக்கும் பல சவால்கள் உரு­வா­கி­யுள்­ளன. பௌத்­தர்கள் மதம் மாற்­றப்­ப­டு­கின்­றார்கள். நாம் எவ­ரையும் மதம் மாற்­ற­வில்லை.

இன்று பௌத்த மர­பு­ரிமை பிர­தே­சங்கள், வர­லாற்று தொல்­பொருள் பிர­தே­சங்கள் கிழக்கில் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கண்­டியில் ‘பள்­ளிரோட்’ என்ற பெயர்க்கல் எம்மால் உடைக்­கப்­பட்­ட­தாக கூறு­கின்­றார்கள். ஆனால் இந்தப் பாதை முன்பு ‘எஹ­ல­பொல குமா­ரி­ஹாமி’ என்ற பெய­ரிலே அழைக்­கப்­பட்­டது.

அன்று இந்­தப்­பெயர் ‘பள்­ளிரோட்’ என்று மாற்­றப்­பட்ட போது நாம் எதிர்க்­க­வில்லை. இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் வஹா­பிஸம் பரப்­பப்­பட்­டதன் பின்பே பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. முஸ்லிம் பெண்கள் முழு­மை­யாக உடலை மறைத்துக் கொள்­கி­றார்கள். இவர்கள் யார்? ஆணா? பெண்ணா? என்று அறிய முடி­யா­துள்­ளது. ஷரீஆ சட்டம் அமுலில் இருக்­கி­றது. முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 12 ஆக எம்மால் அனு­ம­திக்க முடி­யாது. பௌத்த நாட்டில் இவ்­வா­றான சட்­டங்­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது என்றார்.

உலமா சபைத்­த­லைவர் ரிஸ்வி முப்தி
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்­தியும் முஸ்லிம் தரப்பின் நிலைப்­பாட்­டினை முன்­வைத்தார்.

புனித குர்ஆன் கரு­ணை­யையும் அன்­பை­யுமே போதிக்­கி­றது. ஏனைய மதங்­களை நேசிக்கும் படியே கூறி­யுள்­ளது. இஸ்லாம் சம்­பந்­த­மான விட­யங்­களை, குர்­ஆனை தெருக்­களில் விமர்ச்­சிக்­கா­தீர்கள். விளக்­கங்கள் தேவை­யென்றால் எம்­மிடம் கேளுங்கள். பிரச்­சி­னை­களை கலந்­து­ரை­யாடல் மூலம் தீர்த்துக் கொள்ள முன்­வா­ருங்கள்.

இது எமது தாய் நாடு. நாம் நாட்­டுப்­பற்­றுள்­ள­வர்கள். சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள். முஸ்­லிம்கள் நாம் அமை­தியை விரும்­பு­ப­வர்கள். புரிந்­து­ணர்­வுடன் வாழ்பவர்கள். எங்கள் மீது நீங்கள் சந்­தே­கப்­ப­டு­கி­றீர்கள் என்றால் சந்­தே­கங்­க­ளுக்­கான தெளி­வு­களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வீணாக குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் எமது கலா­சா­ரத்­தையும் விமர்­சித்து அவ­ம­தித்துக் கொண்­டி­ருந்தால் நாட்டில் நல்­லி­ணக்கம் உரு­வா­க­மாட்­டாது.

முஸ்­லிம்கள் நாட்டின் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்டு வாழ்­ப­வர்கள். நாம் தீவி­ர­வா­தி­க­ளல்ல. எம்மை ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இலங்­கையில் ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ராக முதன் முதல் குரல் கொடுத்­தது உலமா சபையே.

இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை எதிர்க்­கி­றது. ஐ.எஸ். அமைப்பு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­க­ளுக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்ற அமைப்பு என நாம் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளோம் என்­றாலும் எம்மை தொடர்ந்து ஐ.எஸ். உடன் தொடர்­பு­ப­டுத்­து­கிறீர்கள்.

எமக்­கி­டையே பிரச்­சி­னைகள் இருந்தால் பேச்­சு­வார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும். சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களைப் புகழ்ந்து புத்­த­கங்கள் எழு­தி­யுள்­ள­மையை இங்கு நான் குறிப்­பிட்­டாக வேண்டும். கரு­ணா­ரத்ன ஹேரத் ‘முஸ்லிம் நீதிய’ (முஸ்லிம் சட்டம்) என்று புத்­த­க­மொன்று எழு­தி­யுள்ளார். இலங்­கையில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை கடு­மை­யாக அமுல் நடத்­துங்கள்.

ஷரீஆ ஒரு தீவி­ர­வாத சட்­ட­மல்ல. அது அல்­லாஹ்வின் சட்டம். ஷரீஆ தெளி­வு­களை நாம் உங்­க­ளுக்கு வழங்க காத்­தி­ருக்­கிறோம். நாம­னை­வரும் இலங்­கையர் என்ற வகையில் வேறு­பா­டு­களை மறந்து ஒற்­று­மைப்­பட வேண்டும். நல்­லி­ணக்­கத்தின் பங்­கா­ளர்­க­ளாக வேண்டும் என்று ஏனைய மதத் தலை­வர்­களை வேண்டிக் கொண்டார்.

ஏன் இந்த மத­வாதம்?
எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் இன­வாதம் இன்று நேற்று தோன்­றி­ய­தல்ல. அது நீண்ட கால­மாக இருந்து வரு­கி­றது. ஆனால் இந்த இன­வாதம் அண்­மைக்­கா­ல­மாக மத­வா­த­மா­கவும் மாறி­யுள்­ளது. கடந்த காலங்­களில் முஸ்லிம், தமிழ் என்று இன­வா­தமே பேசப்­பட்­டது. ஆனால் அண்­மைக்­கா­ல­மாக பௌத்த கடும்­போக்கு வாதிகள் மதங்­களின் மீது கைவைக்­கி­றார்கள். இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.

குர்ஆன் அவ­ம­திக்­கப்­ப­டு­கி­றது. அல்­லாஹ்­வையே அவ­ம­தித்துப் பேசு­கி­றார்கள். ஞான­சார தேரரைப் பொறுத்­த­மட்டில் தான் தனது சமூ­கத்தின் மத்­தியில் பிர­பல்யம் பெறு­வ­தற்­கா­கவே இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் போஷிக்­கிறார். இவ­ரது பின்­ன­ணியில் ஏதோவோர் சக்தி செயற்­ப­டு­கி­றது என்றே எண்ணத் தோன்­று­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுத்து வந்த ஞானசார தேரர் தற்போது வடக்கு கிழக்கையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளார். அண்மையில் கிழக்குக்கு இவர் மேற்கொள்ள முயற்சித்த விஜயம் இதற்குச் சான்றாகும். இலங்கையில் புலனாய்வுப் பிரிவினர், ஞானசார தேரர் போன்றோரின் இலக்கு என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.

சர்வமதத் தலைவர்களின் கலந்துரையாடல்களுக்கு பௌத்த மதத்தின் கடும்போக்கு தேரர்கள் அழைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு மகாநாயக்க தேரர்கள் மாத்திரமே அழைக்கப்பட வேண்டும். அவர்களது கருத்துகளும் ஆலோசனைகளுமே கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றே முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published.