“மண்” கொள்ளை : வண்ணாத்திவில்லு மூங்கிலாற்றிலிருந்து சட்டவிரோத மண்அகழ்வு !! மக்கள் விசனம்

· · 545 Views

ஹிரான் பிரியங்கர

 

சட்டவிரோதமான முறையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் மணல் அகழ்வு நடவடிக்கையின் காரணமாக புத்தளம், வனாதவில்லு, மொன்கிலாறு ஓயா அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.

 

 

 

 

இதனால் குறித்த மொன்கிலாறு ஓயாவை அண்மித்த பகுதியில் வாழும் மக்களது காணிகளும் பாதிக்கப்படுவதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.

 

 

 

மழைக்காலங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஓயாவை அண்டிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் இயற்கை வளங்கள் பல அழிவடைந்து வருவதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர்.

 

 

 

“நாங்கள் அன்றாடம் வேலை செய்து பிழைக்கு​ம் கூலித்தொழிலாளர். எங்களால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு இயற்கை வளம் சூரையாடப்படுவதை, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்” என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.