மச்சம் : வாக்கெடுப்பு நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கான கொடுப்பனவு !! சும்மா உட்கார்ந்து முஸ்பாத்தி பார்த்தவர்களுக்கு கஜானாவை திறந்தார் ஆணையர்

· · 749 Views

கடந்த 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிரூபத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க வெளியிட்டுள்ளார்

 

 

 

அதன்படி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் நியமனத்தைப் பெற்று தேர்தல் கடமையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:

 

 

 

 

வலய மற்றும் வட்டார உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3750ரூபா, மேலதிக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250ரூபா, விசேட கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2250ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் அல்லது எழுதுனருக்கு 2000ரூபா, அலுவலக கனிஸ்ட ஊழியருக்கு 1750ரூபாவும் வழங்கப்படும்.

 

 

 

 

வாக்கெண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:

 

 

தலைமை வாக்கெண்ணும் அலுவலர், உதவி தெரிவத்தாட்சி மற்றும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4500ரூபா, வாக்கெண்ணும் அலுவலர் அல்லது சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4350ரூபா, வாக்கெண்ணும் மேற்பார்வை வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 4350ரூபா, மேலதிக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3000ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2500ரூபா, கனிஸ்ட ஊழியருக்கு 1500ரூபாவும் வழங்கப்படும்.

 

 

 

 

பிரதேச செயலக மட்டத்தில் தாபிக்கப்பட்ட பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு விபரம்:

 

பிரதேச இணைப்பு அலுவலர், உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 2500ரூபா, கனிஸ்ட ஊழியருக்கு 1500ரூபாவும் வழங்கப்படும்.

 

 

 

 

 

மேலதிக படியாக முறையே 2250ரூபா, 2000ரூபா, 1250ரூபா மற்றும் 750ரூபா வழங்கப்படும். இதேவேளை வாக்குப்பெட்டிகளை, ஆவணங்களை கையளித்தலும் ஏற்றலும் கடமைக்கான கொடுப்பனவு விபரம்:

 

கையளித்தலுக்கு : உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 1500ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 1250ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 900ரூபா, அலுவலக ஊழியருக்கு 800ரூபாவும் வழங்கப்படும்.

 

 

 

 

ஏற்றலுக்கு : உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 2500ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2000ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 1500ரூபா, அலுவலக ஊழியருக்கு 1200ரூபாவும் வழங்கப்படும்.

 

 

 

 

அனைத்துக் கொடுப்பனவுகளும் எதிர்வரும் 30.04.2018 இற்கு முன் செலுத்தப்படல் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரத்னாயக்க சம்பந்தப்பட்ட சகலருக்கும் சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.