மகிந்த பாய் : தங்காலையில் பள்ளிவாசல் அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு பெசிலுக்கு மகிந்த உத்தரவு

· · 549 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் மத தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

புதுவருட தினத்தை அடுத்து முஸ்லிம் மதத் தலைவர்களை சந்தித்த மஹிந்த, அவர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.

மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதான முஸ்லிம் மத தலைவர்களான மொஹமட் அல் பாஹிஸ், வசீர் மவுலானா நசீம் தலைமையிலான குழுவினர், இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது அந்தப் பிரதேசத்தில் புதிதாக கட்டப்படும் பள்ளிவாசலின் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மஹிந்த உறுதியளித்துள்ளார்.

இதற்கான பணம் மற்றும் பொருட்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்சவுக்கு, மஹிந்த ராஜபக்ச தொலைப்பேசி அழைப்பின் ஊடாக பணிப்புரை வழங்கியுள்ளார்.

mahinda-dua

இந்தத் தகவலை மஹிந்தவின் ஊடக அதிகாரி ஒருவர், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.