மகிந்த அருகில் இருந்தும் பேசிக்கொள்ளாத ஹிரூணி..!! முகத்தை திருப்பிக் கொண்டார்

· · 730 Views

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் ஊடகங்களில் பிரபல்யமாகி இருந்தன.

hirini

காலம் சென்ற முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதி சடங்கின் போது மஹிந்த ராஜபக்ச மற்றும் ஹிருணிக்கா அருகில் இருந்த போதும் பேசிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஹிருணிக்காவுக்கு காணப்பட்ட அரசியல் பிரச்சினை காரணமாக மஹிந்தவுடன் பேச முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இது குறித்து பல்வேறு ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு கருத்து வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் தற்போது மற்றுமொரு புகைப்பட கலைஞர் மஹிந்த – ஹிருணிக்கா சமாதானமாக பேசும் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தி அரசியல் நடத்த முயற்சிக்கும் சிலருக்காக இந்த இரண்டாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஹிருணிக்காவை அரசியல் நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களத்தில் இறக்கியிருந்தார். எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஹிருணிக்கா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.