மகிந்தவுக்கு அதிகம் சலுகை வழங்குகிறார் என்பதால், போலீஸ் அமைச்சுப் பதவியில் இருந்து சாகல மாற்றம்..? Dr. ராஜித போலீஸ் மந்திரியாகிறார்

· · 984 Views

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியில் ராஜித சேனாரத்னவை நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பரிந்துரைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

ஜனவரி 8 சக்திகளின் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

 

 

 

 

கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளில், அமைச்சர் சாகல ரத்நாயக்க, ராஜபக்சவினருக்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் உதவி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே அவரது பதவியை ராஜித சேனாரத்னவுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பு வழங்கிய நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, தேர்தல் தோல்வி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்ததுடன் அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published.