மகிந்தவின் தங்காலை வீட்டில் காவலுக்கு இருந்த 35 பொலீசார் நீக்கம்..!! Ex – Boss complaint

· · 725 Views

அம்பாந்தோட்டை தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

mahinda-with-muslim-hajiyar

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தம் கூறுகையில்…

அம்பாந்தோட்டையில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்ற பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தாக்குதலுக்கு இலக்கான குண்டர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது, தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எந்த காரணிகளின், சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்டார்கள்?

பௌத்த பிக்குகளின் சீருடைகளை கழற்றி தாக்க வேண்டுமெனக் கூறிய நபர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி அவரை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

பௌத்த பிக்குகளை தாக்குமாறு உத்தரவிடப்பட்டதனை நாம் கேட்டோம். அதன் பின்னரே மோதல்கள் உக்கிரமடைந்தன.

தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சிறையிலும், தாக்கியவர்கள் வெளியிலும் இருக்கின்றார்கள்.

கொழும்பில் இருந்த செனறவர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தங்காலையில் எனது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கி வழங்கி வந்த 35 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

என்னை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

நான் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் மீளவும் கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.