மகிந்தவின் செயற்பாடு காரணமாக மனமுடைந்தே ஞானசாரர் பென்ஷனில் போகிறார் !!!

· · 1709 Views
பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் அவ்வமைப்பின் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பு வட்டார செய்திகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்.
இது தொடர்பில்  பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேவை தொடர்புகொண்டு கேட்ட போது..
bbs-gnana
மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட அவர் ..
ஞானசார தேரர் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெறப்போவது தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என குறிப்பிட்ட அதேவேளை தேரர் சமகால விடயங்கள் தொடர்பில் அவர் மனமுடைந்து உள்ளதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்காக தாங்கள் முன்னின்ற போதும் அவர் தாங்கள் அமைப்பு தொடர்பிலும் ஞானசார தேரர் தொடர்பிலும் கூறிய கருத்துக்கள்  மனமுடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் நாம் பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேவை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மடவளை நியுஸுக்கு       குறிப்பிட்டார்.
நாளை மறுதினம் நுகேகொடயில் இடம்பெறவுள்ள சாசன பாதுகாப்பு சபையின் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானில் இருக்கும் ஞானசார தேரர் நாளை நாடு திரும்பவுள்ளதாகவும் அவரது ஓய்வை அறிவித்த பின்னர் அவர் இந்தியாவில் உள்ள விகாரை ஒன்றிற்க்கு சென்று அங்கு தங்கிவிட தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
நன்றி : மடவளை நியூஸ்

Leave a Reply

Your email address will not be published.