மகிந்தவின் இளைய மகன் அனுப்பிய செய்மதி எங்கே..?J.V.P. பாராளுமன்றில் கேள்வி – இந்த செய்மதியை ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் ஒன்றே விண்ணுக்கு ஏவியதாம்

· · 678 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி, காணாமல் போயுள்ளது.

எனவே, அதனை கண்டு பிடிப்பதற்கு புதிய செய்மதி ஒன்றை உருவாக்கி தாருங்கள் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

sat

நாடாளுமன்றத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி தொடர்பில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.

பண்டங்களை ஏற்றி இறக்கும் நிறுவனமான சுப்ரீம் செட் தனியார் நிறுவனம், செய்மதியை அனுப்பும் தகுதியை எவ்வாறு பெற்றது? – என நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியிருந்தார்.

அக்கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் தனக்கு தெரியாது வேண்டும் என்றால் அதனை கண்டு பிடிக்க அரசாங்கத்தினூடாக புதிய செய்மதியை உருவாக்கி தாருங்கள் என கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.