மகிந்தவின் இப்தார் சிந்தனை : ” ஐந்து வேளை தொழும் உங்களுக்கு எதிராக யார் சூழ்ச்சி செய்தார்கள் என்பதை விரைவில் இறைவன் காட்டுவான்..!!

· · 974 Views

அ.அஹமட்


நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை உங்கள் இறைவனை வணங்குறீர்கள்.யார் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சிசெய்தார்கள் என்பதை உங்கள் இறைவன் உங்கள் கண்முன்னே விரைவில் காட்டுவார்” என முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்‌ஷ கூறி சரியாக இன்று ஒரு வருடம் ஆன நிலையில் இன்று நல்லாட்சி அரசு முக்காடு களைந்துநிர்வாணமாகி நிற்கிறது.

 

 

கடந்த வருடம் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

கடந்த வருடம் அவர் மேற்கூறிய விடயத்தை கூறும் போது அவரை பார்த்து ஏளனமாக சிரித்த முஸ்லிம் சமூகம் இன்றுஇந்த நல்லாட்சியாளர்களுக்கு இறையாகிவிட்டோமே என்ற ஏக்கத்தில் தவித்து நிற்கிறது.

 

 

 

உலக வரலாற்றில் நாம் கண்டிராத அளவுக்கு ஞானசார என்கிற தேரர் அல்லாஹ்வை இழிவு படுத்திவிட்ட பின்பும்எமது அமைச்சர்கள் பலவகைகளிலும் அலுத்தம் கொடுத்த பின்பும் இந்த அரசாங்கம் ஞானசாரவை பாதுகாக்கிறதுஎன்பதை வைத்தே இந்த அரசாங்கத்துக்கும் ஞானசாரவுக்கும் உள்ள உறவு என்ன என்பதை நாம் ஊகித்துக்கொள்ளமுடியும் .

 

 

இவ்வளவு காலமும் அறையில் ஆடியவர்கள் இப்போது அம்பலத்தில் ஆட்வேண்டிய நிலை தோன்றியுள்ளதால் அவர்களது நிர்வாணம் முஸ்லிம் சமுகத்திடம் இன்று வெளிப்பட்டுள்ளது.

 

 

உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் உண்மையான இனவாதிகள் யார் என்பது விடயத்தில் மிகவும் அவதானத்துடன்நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

2 comments

  1. Perinavaatha thalaivarkal yaavarum vesathaarikal thaan.athil engalukku entha santheakamum illai.!!!!?

Leave a Reply

Your email address will not be published.