மகாசேன பலகாயவின் அமித் ஜீவன் வீரசிங்கவுக்கு கலவரத்திற்க்காக வெளிநாட்டு நிதி கிடைத்ததா..? அரசாங்கம் கடும் விசாரணை

· · 172 Views

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், மகாசோஹோன் பலகாயவின் தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு அவசரகாலச்சட்டத்தின் கீழ் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

அவர்களுக்கு யார் நிதி அளித்தார்கள், அவர்களின் எதிர்காலத் திட்டம் என்ன, இந்தச் சதிக்குப் பின்னால் எந்த உள்ளூர் அரசியல் தலைமைகள் அல்லது வெளிநாட்டு தலையீடுகள் இருந்ததா என்று இவர்களிடம், விசாரணை நடத்தப்படுகிறது’ என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.