பௌத்தர்கள் VS முஸ்லிம்கள்:” மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள், Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள், ஸாகிர் நாயக்கை கொண்டு வந்தோம் அவர்கள் விராதுவை கொண்டு வந்தார்கள், S.L.T.J தொடங்கினோம் அவர்கள் பொதுபலசேனாவை தொடங்கினார்கள்…!! முஸ்லிம்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை

· · 886 Views
ARM INAS-
வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம்
அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள்
நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம்
அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள்
நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம்
அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள்
நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம்
அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள்
நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம்
அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள்
நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம்
அவர்கள் உலகத்துக்கே கேட்க பண போட்டார்கள்
நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தோம்
அவர்கள் பூமிபுத்ரா கட்சியை ஆரம்பித்தார்கள்
நாங்கள் S….TJ தொடங்கினோம்
அவர்கள் பொதுபலசேனாவை தொடங்கினார்கள்.
நாங்கள் ஸாகிர் நாயக்கை கொண்டு வந்தோம்
அவர்கள் விராதுவை கொண்டு வந்தார்கள்.
முழு தவறும் நம் பக்கம் என்று சொல்ல வரவில்லை
நமது பக்கத்திலும் தவறுகள் இருக்கிறது என்றே சொல்கிறேன்
எமது பாதையை ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்போம்
தவறுகள் இருந்தால் மீள்பரிசீலனை செய்து திருத்திக்கொள்வோம்.

One comment

Leave a Reply

Your email address will not be published.