பௌசியின் பேத்தியை கொலை செய்வதாக அவரின் கணவர் மிரட்டல்..!! தாக்குதலுக்கும் உள்ளானார் ஹஃப்ஸா

· · 602 Views

நீதிமன்ற வளாகத்தினுள் தாம் தாக்கப்பட்டதாக அரசவை அமைச்சர் ஏ.எச்.எம்.ஃபௌசியின் பேத்தியும் சட்டத்தரணியுமான ஃபாத்திமா ஹஃப்ஸா நீதிமன்ற பொலிஸிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவிலும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் தேசிய அதிகார சபையிலும் பதிவுசெய்துள்ளார்.

 

 

 

இத்தாக்குதலை, பிணையில் வெளிவந்திருக்கும் தனது முன்னாள் கணவரும் வைத்தியருமான ஷாஸ்லி மௌஜூத்தே நடத்தியிருப்பதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

தமது வயிற்றில் குத்தியதாகவும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் மௌஜூத் மீது ஹஃப்ஸா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் ஹஃப்ஸா தேசிய வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.