போர்க் குற்றம் தொடர்ப்பான விசாரணையில் மாற்றமில்லை..!! செய்ட் ராட் அல் ஹூஸைன்

· · 337 Views

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது,ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்றம் என்ற கொள்கையில் மாற்றமில்லை என்று ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

warcrims-3

தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறையின்போதுஒரு சர்வதேச நீதிபதியையாவது ஏற்றுக்கொள்ளவேண்டு;ம் என்று இலங்கையின் நல்லிணக்கபொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை அடங்கிய ஆவணம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று நேற்று அமைச்சர்ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தமது பதில்கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

அதில் கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றஉயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் ஹூஸைனின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றுபேரவை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.