பொலீஸ் மா அதிபரால் தாக்கப்பட்ட லிப்ட் ஒபெரேட்டர் சமரகோன் பண்டா, ஓய்வு பெற்றார் !! இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் ஆணைக்குழு, அரசியலமைப்புச் சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவிற்கு சார்பாக நடந்துகொண்டதாக கடும் விமர்சனம்

· · 618 Views

‘தியானம் செய்யாத குற்றத்திற்காக” பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாதி பண்டாவினால் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தாக்கப்பட்ட சமரகோன் பண்டா என்ற மின்தூக்கியை இயக்கும் ஊழியர் இன்று (30) பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

 

 

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் ஆணைக்குழு, அரசியலமைப்புச் சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாதி பண்டாவிற்கு பக்கசார்பாக நடந்துகொண்ட நிலையில் அந்த ஊழியர் ஓய்வுபெற்றுள்ளார்.

 

 

 

 

 

பொலிஸ்மா அதிபர், குறித்த ஊழியரைத் தாக்கிய வீடியோ காட்சிகள் ஊடகங்கள் வெளிவந்தன. பொலிஸ் ஆணைக்குழு, இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவில்லை. ஆனால், வீடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு வழங்கியது யார் என்பது குறித்து அந்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தது. இதுவொரு தாக்குதல் அல்லவென பொலிஸ்மா அதிபர் இறுதிவரை வாதிட்டார். வெறுமனே சட்டைக் கொலரினால் பிடித்து இழுக்கப்பட்டது மட்டுமே என அவர் வியாக்கியானம் சொன்னார்.

 

 

தனிப்பட்ட ஒருவரின் தன்மானம் பாதிக்கப்படுவது குறித்து பொலிஸ்மா அதிபர் கணக்கெடுக்கவில்லை. இந்த தாக்குதல் குறித்தும் பொலிஸ் ஆணைக்குழுவில் எவரும் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையென்ற கருத்தே அவர்கள் மத்தியில் இருந்தது. இதற்குக் காரணம் பொலிஸ்மா அதிபர் என்ற உயர் பதவியே. சட்டம், ஒழுங்கு இல்லாத ஒரு நாட்டில், 35 வருடங்கள் பணியாற்றிய சமரகோன் பண்டாவிற்கு, தன்மானத்தை இழந்து, மௌனமாக ஓய்வுபெறும் நிலையே இன்று பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பட்டது.

 

 

சமரகோன் பண்டா ஓய்வுபெறுவதுடன் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட தாக்குதலும் மறதி என்ற புத்தகத்தில் சேர்ந்துவிடும். கடந்த 10 மாதத்தில் 10 கொலைகளைச் செய்த இலங்கை பொலிசார், பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாதி பண்டாவின் தாக்குதலை முன்னுதாரமாகக் கொண்டு இன்னும் வீரியமாக செயல்படுவர். கொலைகளைத் தொடர்ந்து செய்வர். அப்போதும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் ஆணைக்குழு, அரசியலமைப்புச் சபை ஆகியன நித்திரையில் இருக்கும்.

 

 

பொலிஸ் அதிகாரிகள் அந்த ஊழியரின் வீட்டிற்குச் சென்று ஓய்வுபெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். பொலிஸ்மா அதிபருக்கெதிரான போராட்டத்தை வெற்றிகொள்ள முடியாது போன சமரகோன் பண்டாவிற்கு இறுதியில் ஓய்வுபெற நேரிட்டது.

 

 

 

ஒற்றைக் கையினால் ஒலி எழுப்ப முடியாது என்பதால் எமது போராட்டத்தையும் கைவிட வேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டிற்கு இடிவிழுந்தாலும், பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாதி பண்டார தற்போதைக்கு மகிழ்ச்சியாக வெற்றிக்களிப்பில் இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published.