“பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ய, மஹிந்த ஒன்றும் சாதாரண நபர் கிடையாது !! எச்சரிக்கை

· · 508 Views

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்யக் கூடிய சாதாரண நபரா மகிந்த ராஜபக்ச என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

17362557_10154145805841467_1623723723937703222_n

கொழும்பில் நேற்று இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ச என்பவர் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவரது முழுக்குடும்பத்தையும் தேசத்திற்காக தியாகம் செய்தவர்.

அவ்வாறான ஒரு நபரை தொடர்ந்தும் முறைகேடாக நடாத்துகின்றார்கள். விசாரணைகள் செய்து கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இவை அனைத்தையும் கண்டு மகிந்த பொறுமையாக இருக்கின்றார். நாட்டு மக்களுக்காக தன்னை தியாகம் செய்து கொண்டதாலேயே அவர் பொறுமையாக இருக்கின்றார்.

அதேபோன்று எத்தனை விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சிறைச்சாலைகளில் அடைத்தாலும் நாம் ஓயப் போவதில்லை.

தாய் நாட்டுக்காகவும், உங்களுக்காகவும், மக்களுக்காகவும் நாம் செய்யும் செயற்பாடுகளை ஒரு போதும் நிறுத்திக் கொள்ளப்போவது இல்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம் எனவும் பசில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.