பொலீஸ் உஷார் : திருகோணமலை ஜூம்ஆப் பள்ளிவாசல் மீது தீ வைத்த சம்பவத்தில் சதீஸ்குமார் என்பவர் கைது !!

· · 471 Views

(Trincomalee M.T.M.Faris)

 

திருகோணமலை பெரிய கடை மனையாவெளி ஜூம்ஆப் பள்ளிவாசல் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை மிகிந்தபுரத்தைச் சேர்ந்த சதிஸ் குமாா் (வயது 22) என்பவராவாா். இவரை இன்று 8ம் திகதி துறைமுகப் பொலிஸார் திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சித்திரவேலு சுபாசின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸாா் தெரிவித்தனர்.

 

 

 

கடந்த ஞாயிற்றுக் கிழமை (04.06.2017) அதிகாலை 4.00 மணியளவில் பள்ளிவாசலின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருகொணமலை துறைமுகப் பொலிஸின் நிலையப் பொறுப்பதிகாாி ரொசான் திமித் அலத்கமகே தலைமையிலான வசிசேட குழுவின் தீவிர விசாரணையின் போதே மேற்படி ந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.

 

 

 

இதன் பிண்ணனியில் மற்றும் பலர் இருக்கலாமென பொலிஸாா் சந்தேகிப்பதுடன் அவர்களையும் மிக விரைவில் கைது செய்து நீதமன்றம் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.