பொது மக்கள் ஏதேனும் கடிதம் பெற வந்தால் 30 நிமிடங்களுக்குள் வழங்குமாறு ந.ச.தலைவர் கே.ஏ.பாயிஸ் உத்தரவு !!

· · 865 Views

புத்தளம் நகர சபையின் காரியாலய உத்தியோகத்தர்களோடு விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று (06) நகர சபை காரியாலயத்தில் இடம் பெற்றது.

 

இதன் போது அக்கூட்டத்தில் கலந்து காெண்ட புத்தளம் நகர சபையின் தலைவர் கே ஏ பாயிஸ் அவர்கள் காரியாலய உத்தியோகத்தர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

 

 

 

 

அதன்போது கருத்து தெரிவித்த கே.ஏ.பாயிஸ் அவர்கள்,

நாம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சேவையை செய்ய இங்கே வந்திருக்கின்றோம்,  அதே போல் பொது மக்களின் பணத்தின் மூலம் ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலை செய்யவே நீங்களும் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்,

 

ஆகவே பொதுமக்கள் ஒரு கடிதம் ஒன்றையேனும் பெற்றுக் கொள்ள நகர சபைக்கு வருவார்களாகயிருந்தால் குறைந்தது 30நிமிடங்களுக்குள் அவர்களுக்கு அக்கடிதம் வழங்கப்பட வேண்டும் எனவும்,

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாத விடத்து அவர்களின் வேலைகளையும் கடமையில் இருப்பவர்கள் பதில் கடமை புறரிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அன்புக் கட்டளை ஒன்றையும் விடுத்தார.

 

 

இக்கூட்டத்தில் சக நகர சபை உருப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.