“பெரோஷா முசம்மில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்றதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலே காரணம் !! அவருக்கு போட வேண்டாம் என பெரிய பள்ளி கூறியதாம்

· · 404 Views
(அஷ்ரப் ஏ சமத்)
ரோசி சேனாநாயக்க நேற்று (23) திகதி பி.பகல் பெரோசா முசம்மிலின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் ஆற்றிய உரையின் உண்மைத் தன்மை என்ன ?கொழும்பு பெரிய பள்ளிவாசல் அவ்வாறானதொறு முடிவை எடுத்ததா ?அவரது உரையின்போது அவர் கூறியதாவது,
கொழும்பில் கடந்த பாராளுமன்றத் தோ்தலின்போது ஜ.தே.கட்சியில் பெரோசாவும் போட்டியிட்டாா். ஆனால் முஸ்லீம்களது வாக்குகள் பேரொசா முசம்மிலுக்கு கணிசமாக கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் அவரும் இன்று பா.உறுப்பிணாயிருப்பாா். அதற்கு காரணம் கொழும்பில் பெரிய பள்ளிவாசலில் தீா்மாணம் ஒன்றை எடுத்திருந்தனா். அதாவது பெரோசாவுக்கு எம்பி யாக வருவதற்கு வாக்களிக்க வேண்டாம் முஸ்லீம் பெண்கள் அரசியல் வருவது நல்லதல்ல எனத் தீர்மாணம் எடுத்தாதலேயே அவா் எம்.பி யாக வரமுடியவில்லை. கொழும்பில் வாழும்முஸ்லீம்கள் பெரோசாவுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கவில்லையெனத் தெரிவித்தாா்
பேரோசா முசம்மில் – ரோசி சேனாநாயக்காவினை கொழும்பில் மேயா் பதவிக்காக ஆதரித்து நடாத்திய காந்தா சவிய மகளிா் அமைப்பின் கூட்டத்தின்போதே ரோசி மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

Leave a Reply

Your email address will not be published.