பெப்ரவரி 15ம் திகதிக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க…!!ஜனாதிபதியின் சவாலை ஏற்றுக் கொண்டது

· · 537 Views

ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும், தனியாக அரசாங்கம் அமைக்க அவர் அனுமதியளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

 

 

 

 

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் (12) நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கான தேவை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகவும், இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதாகவும் தெரியவருகிறது.

 

 

 

 

இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 106 பேர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.