புலமைப்பரிசிலில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களை கௌரவித்தது சின்ன சாஹிரா..!! எப்போதும் போல பளபள..கலகல விழா

· · 1152 Views

 

 

 

 

 
 

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் 2017 தரம்  5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர்.

 

 

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மதுரங்குளியில் அமைந்துள்ள மேர்ஸி லங்கா அமைப்பின் பணிப்பாளர்  நஸ்ர் ஹஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

 

 

இதே வேளை கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் சைனப் மகளிர் பாடசாலையின் மாணவி மாவட்டத்தில்  முதலாவதாக வந்திருக்கும் சந்தர்ப்பத்தில், அவருக்கான உங்கள் கௌரவிப்பு என்ன என முதலீட்டாளர் வை.எம்.ரிஸ்வியிடம் கேட்டபோது ;

 

 

 

“தான் தொடர்ந்து புத்தளம் சின்ன சாஹிரா மாணவர்களையே கௌரவிப்பதாகவும்…பிற பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் பொறுப்பு புத்தளத்தின் மற்ற தனவந்தர்களுக்கும் உண்டு என்றும், எனவே இது பற்றி மற்றவர்களிடமும் பேசும்படி கூறினார்.

 

 

 

 
 

 

 

 பாடசாலையில் முதலிடம் – மாவட்டத்தில் இரண்டாம் இடம் 

பாடசாலையில் இரண்டாமிடம்   – மாவட்டத்தில் ஐந்தாம்  இடம் 

 

பாடசாலையில் மூன்றாமிடம்   – மாவட்டத்தில் ஏழாம்  இடம் 

 

பாடசாலையில் நான்காமிடம்  – மாவட்டத்தில் ஒன்பதாம் இடம் ( இருவர் )

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய மட்ட மீலாத் போட்டியில் ஆரம்ப பிரிவு ஆண்கள் பிரிவில்  சிங்கள பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற மாணவன் 

 

 

( அப்துல் நமாஸ் ) 


 நன்றி : புத்தெழில் ஒன்லைன்

Leave a Reply

Your email address will not be published.