புன்னக்குடா கடலில் மூழ்கிய அல்மஹர்தீன் பர்ஹானின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டது..!! ஏறாவூர் சோகத்தில்

· · 345 Views

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரது சடலம் இன்று பிற்பகல் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

புன்னைக்குடா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்குக்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிய மாணவர்களில் ஒருவரினது சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

era

இந் நிலையில் இன்று பிற்பகல்வேளை மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர – முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) எனும் மாணவனின் சடலம் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டன.

மற்றைய தமிழ் மாணவனின் சடலம் மீட்க்கப்படவில்லை என்பதுடன் மீட்ப்புப் பணிகள் கடற்படையினரின் சுழியோடிகளினால் தேடப்பட்டு வருகின்றது.

கடலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சேகுதாவூத் அக்ரம் (வயது 17) என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.