புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை நிர்வாக இப்தார் சிறப்பாக நடைப்பெற்றது..!! இப்பவே பிறைப் பார்க்கும் நவவி எம்.பி.

· · 360 Views

புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை நிர்வாகம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு, புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில், ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது.

 

 

 

 

புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளைத் தலைவரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.எம். முஹுசி, செயலாளர் முஜாஹித் நிஸார், உப தலைவரும் புத்தளம் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தருமான  எம்.என்.எம். ஹிஜாஸ், பணிப்பாளர் எம்.டி.எம். நபீல் உள்ளிட்ட வை.எம்.எம்.ஏ கிளை நிர்வாகிகள் இணைந்து, இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். ஜெஹுபர் மரைக்கார், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரஹ்மதுல்லாஹ் மரைக்கார் உள்ளிட்ட  வை.எம்.எம்.ஏ கிளை அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

 

 

ஐக்கிய இராச்சியத்தின் யாழ். முஸ்லிம் சங்கம், இந்த இப்தார் நிகழ்வுக்கு பூரண அனுசரணை வழங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.