புத்தளம் பிரதேச சபை தலைவர் தெரிவுக்கு எந்த நிபந்தனைகளும் இன்றி மு.கா. வாக்களித்தது தொடர்பில் கவலை வெளியீடு

· · 661 Views
சரியான பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளப்படாமையினால் புத்தளம் பிரதேச சபையில் மு.கா பிரதி தவிசாளர் பதவியை இழந்துள்ளமை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ( மொட்டு) 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்கள் என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.
இதன் அடிப்படையில், புத்தளம் பிரதேச சபையில் எந்தக் கட்சிகளும் தனித்மு ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் வாக்கெடுப்பு ஒன்றின் மூலமே தவிசாளர், பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, ஸ்ரீ.பொ.பெரமுன வெற்றிபெற்ற புத்தளம் பிரதேச சபையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அஞ்சன சந்தருவன் தலைவராகவும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் பிரதித் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
எஎனினும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மு.கா புத்தளம் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது குறித்து ஐ.தே.கவுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தால் பிரதி தவிசாளர் பதவியைப் பெற்றிருக்க முடியும் என ௯றப்படுகிறது.
ஸ்ரீ.பொ.பெரமுனக்கு இரண்டு சுயேட்சை குழு உறுபினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஐ.தே.கவுக்கு 2 உறுப்பினர்களைக் கொண்ட சு.கவும், 3 உறுப்பினர்களைக் கொண்ட மு.காவுமே ஆதரவு வழங்கியுள்ளனர்.
எனவே, புத்தளம் பிரதேச சபையில் 8 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட மொட்டு கட்சியோடு அல்லது 7 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.தே.கவோடு மு.கா பேச்சுவார்த்தை நடத்தி பிரதி தவிசாளர் பதவியை பெற்றிருக்க முடியும்.
ஆனால் கடைசி நேரத்தில் வந்து கறிவேப்பிலை போன்று, வாக்களித்தமை பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது என மு.கா ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த கருத்தில் இருந்து, புத்தளம் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ள ஐ.தே.கவுடன் மு.கா எந்தவிதமான உடன்படிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.
இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபையிலும், ஐ.தே.கவுடன் இணைந்து மு.கா ஆட்சி அமைத்திருந்தால் கற்பிட்டி பிரதேச சபையிலும் பிரதித் தவிசாளர் பதவி மு.காவுக்கு கிடைத்திருக்கும் என மு.கா உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மு.கா சரியான தீர்மானம் எடுக்காமையினால் இரண்டு சபைகளில் பிரதி தவிசாளர் பதவி பறிபோயுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

 

சாஹிப் அஹ்மட்

Leave a Reply

Your email address will not be published.