புத்தளம் பிரதேச சபையைக் கைப்பற்றி மானத்தைக் காப்பாற்றியது ஐ.தே.க..!! வெட்டாளைக்காரரின் வைஸ் சேர்மன் கனவு நிறைவேறவில்லை

· · 1357 Views
M.A.காசிம், R.ரஸ்மின்
புத்தளம் பிரதேச சபையின் தலைவர் மற்றும்  உப-தலைவர்  தெரிவு இன்று (05.04.2018) காலை 8.30 மணிக்கு   வடமேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜே.எம்.ஆர்.பீ.ஜயசிங்க தலைமையில் புத்தளம் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடை பெற்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடை பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி கட்சி சார்பில் அஞ்சன சந்தன ருவானுககும், ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன சார்பில் ரதிக்க சஞ்ஜீவை்க்கும் இடையில் தலைவருக்கான இரசகிய வாக்கெடுப்பு இடம் பெற்றது.
இதன் போது  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய கட்சி கட்சி சார்பில் அஞ்சன சந்தன ருவானுக்கு 12 வாக்குகளும் ஸ்ரீ லங்கா  பொது ஜனப் பெரமுன சார்பில் ரதிக்க சஞஜீவைக்கு 10 வாக்குகளும் கிடைக்கப் பெற்றதுடன் புத்தளம் பிரதேச சபையின் தலைவராக 02 மேலதிக வாக்குகளினால் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட அஞ்சன சந்தன ருவான்  தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் உப-தலைவருக்காக  ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.ஜே.எம்.றிபாயும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜயம்பதி பந்திராஜாவும் ஸ்ரீ லங்கா பொது ஜனப் பெரமுன கட்சியின்  சார்பில் மனுல குமாரவும் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்களின் இரகசிய வாக்களிப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.ஜே.எம்.றிபாய் 04 வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் ஜயம்பதி பந்திராஜா 10 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா பொது ஜனப் பெரமுன கட்சியின்  சார்பில் மனுல குமார 08 வாக்குளையும் பெற்றனர்.
பின்னர் குறைந்த வாக்குகளைப் பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.ஜே.எம்.றிபாய் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜயம்பதி பந்திராஜாவும் ஸ்ரீ லங்கா பொது ஜனப் பெரமுன கட்சியின்  சார்பில் மனுல குமாரவும் மீண்டும் இரகசிய வாக்கெடுப்பு இரணடாவது முறையாகவும் இடம் பெற்றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜயம்பதி பந்திராஜா 12 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா பொது ஜனப் பெரமுன கட்சியின்  சார்பில் மனுல குமார 09 வாக்குகளையும் பெற்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜயம்பதி பந்திராஜா 03 மேலதிகமான வாக்குகளைப் பெற்று உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
தலைவர் மற்றும் உப-தலைவர் தெரிவின் போது மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் அகில சம்பத் வாக்களிக்காமல் நடு நிலையில் செயற்பட்டார்.
இச் சபைக்கு ஸ்ரீ லங்கா பொது ஜனப் பெரமுன சார்பில் 08 உறுப்பினர்களும்  ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 07 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 03  மக்கள் விடுதலை முன்னணி சுயேட்சைக் குழு 1 மற்றும் சுயேட்சைக் குழு 2 சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
By : lankareuters

One comment

 1. முற்றுப்பெற்ற புத்தளம் உள்ளூராட்சி மன்றங்கள்.
  ******************************************************************

  நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில்
  புத்தளம் நகர சபையில் மு.கா விற்கு இறுதி நேரம் காலைவாரிய ஐ.தே.க விற்கு ஏனைய மூன்று சபைகளிலும் ஆதரவு வழங்குவதில்லை என்று புத்தளம் நகர சபையின் தலைவர் பாயிஸ் (மு.கா) கூறி இருந்தார்.

  அரசியலில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் தீர்மானங்கள் நிலையான வெற்றியை தருவதில்லை.

  அந்தந்த பிரதேசங்களில் வாக்களித்த மக்களின் அபிலாசைகள்,கட்சியின் எதிர்காலம்,எதிர்வரும் மாகாண-பாராளுமன்ற தேர்தல்கள்,சமூக நல்லிணக்கம்,தலைமைத்துவ கட்டுப்பாடு,ஏனைய கட்சி தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள்-விட்டுக்கொடுப்புக்கள்-புரிந்துணர்வுகள் என்பன கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

  அத்துடன் இறுதி நேரத்தில் காலைவாரும் ஐ.தே.க யின் சதித்திட்டத்தை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ ரங்க பண்டார அவர்கள் பாயிஸ் அவர்களின் நட்பின் அடிப்படையில் பாயிஸ் அவர்களுக்கு அதனை வெளிச்சம் போட்டு காட்டினார்.
  இதனால் தனது நண்பரின் அன்பான வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலையும் பாயிஸ் அவர்களுக்கு
  புத்தளம் பிரதேச சபை விடயத்தில்
  ஏற்பட்டிருக்கலாம்.

  இதனால் புத்தளம் நகரபிதா பாயிஸ் அவர்கள் தனது கொள்கையில் ஒரு நெகிழ்வுத்தன்மையை காட்டினார்.

  இதன்மூலம் 04 பிரதான கட்சிகளும் 04 சபைகளை ஆளும் ஒரு நிலையை உருவாக்கினார்.

  #PUTTALAM UC – SLMC
  #PUTTALAM PS – UNP
  #KALPITIYA PS – SLFP
  #WANATHUWILLU PS – SLPP

  இதன்மூலம் எமது பகுதி மக்களின் அபிலாசைகள் நிறைவேறின,எதிர்பார்ப்புக்கள் நிறைவேறின,தலை குனியும் தோல்வியில் இருந்து எமது மக்கள் வெற்றியை சமனாக பங்கிடும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது,

  அத்துடன் தலைமைத்துவம் கெளரவப்படுத்தப்பட்டுள்ளது,மாகாண சபை உறுப்பினர் நியாசின் இலக்கு நிறைவேறியுள்ளது,மன்றாடிய அப்புஹாமியின் ஆசை நிறைவேறியது,பாயிஸை மதித்து தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட இந்த நாட்டின் ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

  இது நகரபிதா பாயிஸின் தூர நோக்கு சிந்தனையுடன், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தீர்க்கதரிசனமாக எடுக்கப்பட்ட முடிவும்,விட்டுக்கொடுப்பும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

  இந்த முடிவின் மூலமாக அனைத்து கட்சிகளுக்கும் அதிகாரத்தை பங்கிட்டு கொடுத்து எவரது கையிலும் அதிகாரம் குவிந்து கிடக்கும் ஒரு நிலை உருவாகாமல் தடுத்து தனது ஆதரவும், தனது கட்சியின் ஆதரவும் இன்றி இந்த மண்ணில் எவரும் கோலோச்ச முடியாது என்பதை இந்த நாட்டுக்கே நிரூபித்து காட்டியுள்ளதுடன்,

  எமது மண்ணை ஆளும் அதிகாரத்தின் ரிமோட் கொண்ரோலை தனது கைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார்.

  பின்வரும் காலங்களில் அவர் கையில் இருக்கும் ரிமோட் கொண்ரோல் அவர் நினைத்தவாறு வேலை செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  *****************************************
  PUTTALAM URBAN COUNCIL
  #CHAIRMAN – SLMC,
  #VICE CHAIRMAN – SLPP
  *****************************************

  PUTTALAM PRADESHIYA SABHA
  #CHAIRMAN – UNP,
  #VICE CHAIRMAN – SLFP
  *****************************************

  VANATHUWILLU PRADESHIYA SABHA
  #CHAIRMAN – SLPP,
  #VICE CHAIRMAN – SLFP
  *****************************************

  KALPITIYA PRADESHIYA SABHA
  #CHAIRMAN – SLFP,
  #VICE CHAIRMAN – SLPP
  *****************************************

  நன்றி
  உவைஸ் அபுசாலிஹ்

Leave a Reply

Your email address will not be published.