புத்தளம் பிரதேசபையின் உப தலைவர் ஆவாரா எம்.ஜே.எம்.ரிபாய் ..? அவரின் கட்சி சகாக்கள் வாழ்த்துகிறார்கள்

· · 781 Views

 

தொடர்ச்சியாக பல உள்ளூராட்சி சபைகளில் செய்யப்பட ஒப்பந்தங்களை இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மீறியுள்ளது.

 

இந்த கழுத்தருப்புகளுக்குப் பின்னால் தம் கட்சியின் உறுப்பினர்களை தலைவர்களாகவும், பிரதி தலைவர்களாகவும் ஆக்கிக்கொள்வதற்கான காய் நகர்த்தலே இருந்திருக்கிறது.

 

அந்த வகையில் மக்கள் ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் என்கிற இயக்கம் கழுத்தருப்பு செய்தவர்களை புறம் தள்ளி, இறுதி நேரத்தில் கைக்கொடுத்தவர்களோடு சேர்ந்து நம் கட்சிகாரர்களை தலைவர்களாகவும், பிரதித் தலைவர்களாகவும் அழகு பார்க்க அனைத்துவிதமான முயற்சியையும் மேற்கொள்கிறோம்.

 

ஆக புத்தளம் பிரதேச சபையில் மொட்டோடு சேர்ந்து நாம் ஆட்சி அமைத்து சகோதரர் ரிபாய் அவர்களை புத்தளம் பிரதேச சபையின் அதிகார கதிரையில் அமர்த்துவதற்கான முழு முயற்சிகளையும் நாம் செய்து முடித்துள்ளோம்.

 

 

புத்தளம் பிரதேச சபையில் மரத்திற்கு வாக்களித்த மக்களுக்கும் சகோதரர் ரிபாய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.