
புத்தளம் பிப்ரவரி 10 : 1 முதல் 7 வட்டாரங்களில் S.L.M.C. வெற்றி !! 2 ல் மகிந்த அணி 2 ல் UNP
· · 2190 Viewsநடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் மைச்சர் கே. ஏ. பாயிஸ் தலைமையிலான முஸ்லிம் கட்சி நகர சபையைக் கைப்பற்றியதை அடுத்து அக்கட்சியின் ஆதரவாளர்களால் புத்தளம் நுஹ்மான் ஹோலில் திரு விழாக் கொண்டாட்டங்கள் இடம் பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஐ.தே. க. சார்ப்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ப்பான அலி சப்ரி ரஹீம், ஆசிரியர் முஹ்சி, முன்னாள் நகர சபை உறுப்பினர் அலிகான், பரூஸ், முர்சித் மற்றும் நுஸ்கி , நிஸ்தார் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
இக்கட்சியின் சார்ப்பில் போட்டியிட்ட தில்லையடையை சேர்ந்த தில்ஷான் மற்றும் சுத்து மகத்திய எனப்படுபவரும் வெற்றியடைந்துள்ளனர் .
புத்தளம் மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வட்டாரம் 1ல் பாயிசும், 4 வட்டாரத்தில் போட்டியிட்ட ரஸ்மையும் வெற்றி அடைந்துள்ளனர். இந்த வட்டாரங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட்ட அலி சப்ரியும், நிஸ்தாரும் தோல்வி அடைந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, N.F.G.G. சார்ப்பில் போட்டிட்ட 5 ம் வட்டார வேட்பாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான அமீனும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இத்தேர்தலில் ஜனாதிபதி சார்ப்பான சுதந்திரக் கட்சி படு தோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.