புத்தளம் நகர சபை வரலாறு : முத்துக்குமாரு, மற்றும் குயின்டீன் ஜோசப் என்ற இரு முஸ்லிம் அல்லாதவர்கள் சேர்மனாக இருந்தவர்கள் !! ஒழுக்கமானவர்களே நகர சபைக்கு தெரிவாக வேண்டும்

· · 472 Views

நாம் வாழ்வது சிறிதோ பெரிதோ நமது நாட்டிற்கு ஏற்றவாறு ஒரு நகரம். இதை ஆழ்வது ஒரு நகர சபை. வரவலாற்றின் எந்தவொரு கால கட்டத்தி்லும் இது ஒரு கிராம சபையாகவோ, பட்டின சபையாகவோ அமைந்ததில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும் இதன் வரலாறு 85 ஆண்டுகளைப் பின்னோக்கிச் ‌செல்கிறது என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒரு சிறப்பம்சம்.

17554415_632387356962425_5517536183240798943_n

இது முஸ்லிம் பெரும்பாண்மையைக் கொண்ட பிரதேசம் என்பதும் நாடறிந்த விடயம் . இப்போது வரையில் நகர நிருவாகம் 09 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது அவற்றில் ஏழு நம் சமுகத்துக் கைகளில்தான் இருக்கிறது. எனவே இத்தனை காலத்துக்கும் இது நமது பிடியில் இருக்கிறது என்று தப்புக்கணக்குப் போட முடியாது.

இச் சபையின் முதலாவது தலைமைத்துவம் நம்முடையது அல்ல. முதலாவது தவலைவர் வீ.ஏ. முத்துகுமாரு என்பவர் ஒரு சட்டத்தரணி. 1933 முதல் 1939 வரையில் இவர் நகர பிதாவாக சேவையாற்றியிருக்கிறார். படித்தவர்களுக்குப் பட்டம் பதவி கொடுக்க வேண்டும் என்று மக்கள் நம்பிய நல்ல காலம் அது. எனவே அந்தக் காலத்திலே மூத்துகுமாரு அவர்களுடன் போட்டியிடத் தகுதி்யானவர்கள் இல்லாதிருந்தார்களோ என்னவோ. ஆனால் அவரது பிரதி நகர பிதாவாக இருந்தவர் இஸ்மாயில் ஐயா அவர்கள்.

கௌரவமாImage may contain: 1 person

மனிதர்கள் இருந்த அந்த நாட்களில் நகர நடப்புக்களும் கௌரவமாகத்தான் இருந்திருக்கிறது. வார்தைப் பிரயோகத்தைக் கூட மிகப் பக்குவமாக அளந்து அளந்து பாவித்த பொற்காலம் அது. பொருத்தமில்லாத வார்த்தைகளை unparliamentarily Words என்று கூறுவார்கள். ஆனால் இப்போது…………………….?

முத்து குமாரு அவர்களின் பின்னர் தொடராகவே நகர நிருவாகம் அரை நூற்றாண்டுக்கு மேல் நமது சமுகத்து படித்தவர்களின் கையில் இருந்திருக்கிறது. நட்ட நடுத் தெருவின் நின்று முழங்காலுக்கு மேல் சாரத்தை உயர்திக் கட்டிக் கொண்டு நம்ம நல்ல ஊர் ஆண்கள் பேசும் வீர மொழி, ஊர் உலகமெல்லாம் ஏழணமாயச் சிரிக்கும் மொழி நமது ஆட்சி மன்றத்தில் ஒலிக்கத் தொடங்கிய நாட்களில் 1972 ல் நகர தலைமைத்துவம் தடுமாறியது. அந்த தடுமாற்றம் காரணமாக குயின்டின் ‌ஜோசப்f கைக்கு நழுவியது. சற்றேத்தாழ மூன்று ஆண்டுகள் அது அவரின் கையில் இருந்தது.

இந்த நிலை நமது துர்ப்பாக்கியம் பிடித்த நகருக்கு மீண்டும் ஒரு முறை வரும் என உறுதியாக நம்புபவகர்கள் நம் மத்திலே இருக்கிறார்கள். நகர நடப்புக்களும் கூட சில பல வேளைகளில் அப்படி அவர்கள் நினைக்க வைக்கிறது.

இந்த நகரத்திலே நம் கைகளில் அதிகாரம் உள்ள தாபனங்கள் என எது இருக்கிறது? அல்லது எதில் நமது மண்ணின் மகன் அல்லது ஒரு மகள் தலைமை ஆசத்தில் அமர்ந்திருக்கிறான்? அல்லது அமர்ந்திருக்கிறாள்? நிறையப் பேசத் இல்லை நமது நகர மத்தில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை எடுத்துக் கொள்ளுவோமே. அங்கு கடைசியாக இருந்த நம்மவர் யார்? அவர் இருந்த காலம் உருண்டோடி எத்தனை ஆண்டுகள் ஆகிவிடன?

நகர ‌சபைக்க நல்லவர்களைத் தெரிவு செய்வது பற்றிய தெளிவூட்டல் ஒன்று கூடல் சில நாட்களுக்கு முன்னர் நமது நகரில் நடைபெற்றிருக்கிறது. எடுத்தற்லெ்லாம் மனைவிமாரின் முன்னாலும், பிள்ளைகளின் முன்னாலும், பெற்றோர்களின் முன்னாலும் கூட ”தூசனை” வார்த்ததைகளைப் பேசாத கண்ணியமான மக்களைத் தெரிவு செய்தல் என்ற ஒரு இலக்கு நமக்குள் இருக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

Leave a Reply

Your email address will not be published.