புத்தளம் நகரம் 24 மணி நேரமும் பொலிஸ் கண்காணிப்பில் !! 48 CCTV கெமராக்களை அன்பளிப்பு செய்தார் அலி சப்ரி ரஹீம்

· · 2301 Views

ஆர்.ரஸ்மின்

புத்தளம் நகரத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 24 மணிநேரம் செயற்படும் வகையில் நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தள மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபா் சம்பிக்க ஸ்ரீவர்தன நேற்று முன்தினம் வியாழக்கிழமை (29) குறித்த பாதுகாப்பு கமராக்களின் கட்டுப்பாட்டு அறையை உத்தியோகபூா்வமாக திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், நகர சபை உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை செயலாளர் நந்தன சோமதிலக, புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீமின் சொந்த நிதியில் இருந்து 48 கண்காணிப்பு கமரா உள்ளிட்ட கருவிகளை புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன ஊடாக புத்தளம் தலைமையக பொலிஸ் காரியாலயத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
புத்தளம் நகரில் 24மணி நேரமும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புத்தளம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன மற்றும் புத்தளம் தலைமையக பொலிஸ்  காாியாலயத்தின் ஊடாகவும் புத்தளம் நகரில் பொருத்தப்பட்டுள்ள குறித்த பாதுகாப்பு கமராக்கள் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

One comment

Leave a Reply

Your email address will not be published.