புத்தளம் தள வைத்தியசாலையில் டாக்டர்கள் உற்பட அனைவரும் ஸ்டிரைக்..!! O.P.D. உற்பட அனைத்து சேவைகளுக்கும் பாதிப்பு

· · 1623 Views

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் உற்பட அனைத்து அதிகாரிகளும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் தற்சமயம் முன்னெடுத்து வருவதாக புத்தளம் தள வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்ட்டத்தால் வைத்தியசாலையின் அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புத்தளம் டுடேயிடம் கருத்துக்கூறிய அந்த அதிகாரி, “அவசர சிகிச்சைகள்” ( Emergency ) மட்டுமே நடக்கும் என்றும், வெளி நோயாளர் பிரிவு ( O.P.D. ) உற்பட மற்றெந்த சேவைகளும் இடம்பெறாது என்றும் அவர் கூறினார்.

இதே வேளை,  இன்று சேவைகள் நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் கூறினார்.

  • அலுவலக செய்தியாளர்

One comment

  1. Today doctors didnot do strike. Please know the facts clearly before posting. OPD doctors and other unit doctors worked as usual. All the other category went into strike. Please come to wards and other units to know tge real facts.

Leave a Reply

Your email address will not be published.