புத்தளம் சாஹிரா NC யின் A/L பெறுபேறுகள் வெளியீடு !! வணிகப் பிரிவில் மூன்று பேருக்கு A சித்தி

· · 521 Views

2017 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வணிகப் பிரிவில் மூன்று மாணவர்கள் மூன்று ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

 

இடமிருந்து வலமாக ஏ.டீ.எம். அர்ஹம்  ( 1.9157   ) , ஆர்.எம். பைனாஸ்    (  1.7149  )  மாவட்டத்தில் ஆறாம் இடம், எம்.என்.ஏ.எம். அப்பான் ( Affan ) ( 1.5509  )

 

 

 

வணிகப் பிரிவில் 24 மாணவர்கள் பரீட்சைக்குத்   தோற்றியத்தில்   16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது  66 சத வீத சித்தியாகும்.

 

வணிகக் கல்வி பாடத்தில் 100 சத வீத  சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது.   24 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 24  மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.  இந்த பாடத்தில் 4 A,  4 B,  8 C,  8 S ஆகிய பெறுபேறுகள் கிடைக்கபெற்றுள்ளன.

 

கணக்கீடு பாடத்தில் 24  மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில்  21 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது  87.5 சத வீத சித்தியாகும். இந்த பாடத்தில்  7 A,   2 B,   4 C,   8 S,  3 W ஆகிய பெறுபேறுகள் கிடைக்கபெற்றுள்ளன.

 

பொருளியல் பாடத்தில் 23 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில்   16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது  69.56 சத வீத சித்தியாகும்.  இந்த பாடத்தில் 3 A,  2 B,  3 C,   8 S,  7  W ஆகிய பெறுபேறுகள் கிடைக்கபெற்றுள்ளன.

( Abdul Namas ) 

Leave a Reply

Your email address will not be published.