புத்தளம் கொழும்பு முகத் திடலில் களியாட்ட நிகழ்ச்சி களைக்கட்டுகிறது !! குதூகலிக்கும் மக்கள்

· · 1552 Views

புனித நோன்புப் பெருநாளையொட்டி, புத்தளம், கொழும்புத் திடலில் இடம்பெற்று வரும் களியாட்ட நிகழ்வுகள், எதிர்வரும் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியின் புத்தளம் 4ஆம் வட்டார அமைப்பாளர் எம்.ஏ.அஸ்கீனின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் குறித்த களியாட்ட நிகழ்வில், புத்தளம், கற்பிட்டி மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர்.

 

 

 

குறித்த களியாட்ட நிகழ்வில் கிணறு போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள குழிக்குள் மோட்டார் சைக்கிள் ஓடுதல், இலத்திரனியல் விமானத்தில் பறத்தல், குதிரை சவாரி மற்றும் இலத்திரனியல் ரயிலில் பயணம் செய்தல் என்பனவற்றுடன், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களைக் கவரும் சாகாச நிழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

 

இந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தனித்தனியே நுளைவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெருநாள் தினத்தில் அப்போதைய பிரபல அரசியல்  தலைவர் இதுப் போன்ற ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடுகளைச் செய்த போது  புத்தளத்தின் ஒரு  இஸ்லாமிய  இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதனை கடுமையாக எதிர்த்ததுடன் நகர சபைத் தலைவருடன் கைக்கலப்பு ஒன்றுக்கும் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற இந்த வாய்வழிச் சண்டையின் போது பிரபல மக்கள் பிரதிநிதி அரசியல்வாதி ஒருவரும், இஸ்லாமிய இயக்கத்தின் நாடறிந்த ஒரு  இஸ்லாமிய அறிஞரும்  பரஸ்பரம் “ரௌடிகளுக்கு ” அழைப்புக்களை விடுத்திருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட மிக ரகசியமான ஒளிப் படங்கள் புத்தளத்தின் மீடியா ஒன்றிடம் உள்ளதாகவும் தெரியவருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.