” புத்தளம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் !! அமைச்சர் ரிஷாத் அழைப்பு

· · 734 Views

இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதன் மூலமே சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

 

 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் மேற்கொண்டு வரும், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி முன்னெடுப்புகள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று, புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது.

 

 

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் அமைச்சர் குறிப்பிடுகையில்,

 

“சபாநாயகர், நிதியமைச்சர் என்று முக்கிய பதவிகளைக் கொண்டவர்களை இந்த புத்தளம் மாவட்டம் கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அற்றதொரு மாவட்டமாகவே காணப்பட்டது.

 

 

“இதனால்தால் புத்தளம் தொகுதி கடந்த காலங்களில் பல இழப்புகளை சந்தித்துள்ளது. எனினும், பல அபிவிருத்தித் திட்டங்களை புத்தளம் தொகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எமது கட்சி திட்டமிட்டிருக்கின்றது.

 

 

“எனவே, எமது இந்தப் பணிகளுக்கு புத்தளத்தில் உள்ள மக்கள், இளைஞர்கள், சிவில் அமைப்புகள் எப்போதும் உதவியாக இருக்க வேண்டும்.

 

 

“இங்கு ஒருசிலர் மட்டுமே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நான் காண்கிறேன். இதுவும் இந்த தொகுதி அபிவிருத்தியில் பின்னோக்கி இருப்பதற்கும் ஒரு காரணமாகவும் இருக்கிறது.

 

 

“எனவே, அதிகமான இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், உண்மையான, நல்ல எண்ணங்களுடன் அரசியல்

 

நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்காத உதவிகள் எமக்கு கிடைக்கும்.

 

 

“உள்ளூராட்சித் தேர்தலில் 40 சதவீதம் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய முகங்கள் துடிதுடிப்பானவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என்பதற்காகவே இளைஞர்களும் உள்வாங்கப்படுகிறார்கள். எனவே, புத்தளம் மக்களுக்குத் தேவையான அத்தனை அபிவிருத்தி பணிகளையும் செய்து கொடுக்க எமது கட்சி தயாராக உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.