புத்தளத்து ஏழைக் குடும்பஸ்தர்களுக்கு புத்தாடைகளை வழங்கியது ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்..!!

· · 713 Views

எதிர்வரும் நோன்புப்பெருநாளை மகிழ்ச்சிகரமானதாக மாற்றி வைக்கும் ​நோக்கத்தோடு, புத்தளம் நகரில் வதியும் தெரிவு செய்யப்பட்ட ஏழைக் குடுங்பங்களுக்கு, இலவசமாகப் புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

புத்தளம் நகரில் ஆன்மீகத் துறையுடன் சமூகப் பணிகளிலும் தொண்டாற்றி வருகின்ற புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம், இந்தப் புதிய ஆடைகளை வழங்கி வைத்துள்ளது.

 

 

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசரின் (ரஹ்மானி) முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்நிகழ்வு, ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் இஸ்லாமிய கற்கை நிலையத்தில் திங்கட்கிழமை (19) காலை நடைபெற்றது.

 

 

புத்தளம், தில்லையடி மற்றும் பாலாவி போன்ற பிரதேசங்களிருந்து தெரிவுசெய்யப்பட்ட 88 குடும்பத்தினருக்கு, இதன்போது இந்த புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.

 

 

வறுமை நிலையில் வாழும் இத்தகைய குடும்பத்தினர்களுக்கு, இந்த புதிய ஆடைகள்  வழங்கப்பட்டதன் மூலம், எதிர்வரும் நோன்புப்பெருநாளை அவர்கள் ஓரளவேனும் சந்தோஷமாகக் கொண்டாடுவதற்கான வழியை, இறைவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளாரென, புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.