புத்தளத்தில் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான 3 மாதகால இலவச பயிற்சி நெறி..!! அழையுங்கள் – 0719569606

· · 592 Views

ரஸீன் ரஸ்மின்

ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான 3 மாதகால இலவச பயிற்சி நெறி,  எதிர்வரும் ஜூலை மாதம் புத்தளம் நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளளது.

 

 

இதற்ககான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

 

 

 
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சின் பூரண அனுசரணையுடன் வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபை குறித்த பயிற்சி நெறியை முன்னெடுக்கவுள்ளது.

 

 

இப்பயிற்சிநெறியை தொடர்வதற்காக புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேருக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி நெறியின் இறுதியில் பிரசித்திபெற்ற ஹோட்டல்களில் உள்ளக பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

 

 

பயிற்சி பெற்றவர்களின் விருப்பத்துக்கு  அமைய, உள்ளக பயிற்சி பெற்ற ஹோட்டல்களிலேயே தொழில்வாய்ப்புக்களும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

அத்தோடு, குறித்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்பவர்களுக்கு அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்களும்  வழங்கப்படவுள்ளன.

 

எனவே, குறித்த பயிற்சி நெறியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பதிவுகளுக்கும், மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் 0719569606 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.