புத்தளத்தில் தேங்கிக் கிடக்கும் 30, 000 கரண்ட் பில்கள்..!! ஏன் மின்மானி பில்கள் நேரத்திற்கு வருவதில்லை..? காரணத்தைப் பார்த்தாலே வெட்கம்

· · 1013 Views

ஒரு மாதத்துக்கு மின் சிட்டை விநியோகம், இரண்டு மாத்துக்கொரு முறை மின் மாணி வாசிப்பு” இப்படி பழக்கப்படுததிக் கொண்டுளார்கள் போலும் இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பானவர்கள். அவ்வந்த மாதம் மின் மாணி வாசிக்கப்பட்டு வழங்கப்படும் மின் சிட்டைகளுக்குரிய கண்டணத்தைச் செலுத்தவே சமுகத்தில் அனேகருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. இந்த நிலையில் இரண்டு மாதத்துக் கொரு முறை மின் மாணி வாசிக்கப்படுவதால் விஷம் போல ஏறிப்போகும் மின் கட்டணத்தை எப்படிச் சமாளிப்பது?

puces

”மின் மாணி வாசிப்பாளர்கள் நீண்ட நாள் இடைவௌயின் பின்னரே வீடுகளுக்கு வருவது பற்றி நம்மிடம் பலர் தெரிவித்தால் அது பற்றி கேட்டு வர அண்மையில் நாம் இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேச பொறியிலாளர் பணி மனைக்குச் சென்றிருந்தோம். நமக்கெல்லாம் இந்த நாட்டு நல்லாட்சியில் தகவல் அறியும் உரிமை, விஷேடமாக இதழியலாளர்களுக்கு தரப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும் தயங்கித் தயங்கி, பாதியை முழுங்கி, பாதியை வெளிட்ட பரிதாப நிலை பற்றி நாம் எழுதியபோது அது அந்த அலுவலத்துக்கு மின்சார ”ஷொக்” ஒன்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ”உண்மை திரிபு படுத்தப்பட்டுள்ளது” என சீறிச் சினந்து பொறியிலாளர் அலுவலகம் எழுதிய கடிதத்தையும் சூடு ஆறுவதற்கு முன்னர் நாம் வெளியிட்டிருந்தோம்.

பாடசாலை மாணவர்களின் ”சொல்வதெழுதலாக” எமது பத்திரிகைத் துறை எதையும் எழுத முடியாது. எமக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே ” உள்ளதை உணர்ந்தாவு எழுதினோம்” அதைப் பற்றி தனது அதிருப்தியைத் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேச அலுவலகம் ” A bad media experience” என அதை வருணித்திருந்தது. என்றாலும் அங்கே ஒரு உண்மை மறைக்கபடுவதை நாம் எமது வாசகர்களுக்கு கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

எமது அடுத்த கட்டத் தேடல் கருப் பொருள் பிரச்சினையை வெளிக் கொணர்ந்தது. அதுதான் அந்த பிரதேச பொறியிலாளரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் போதிய அளவு ” மின் மாணி வாசிப்பாளர்” இல்லை என்ற உண்மைதான் அது. இது என்ன தூக்குத் தண்டை வழங்கப்படக் கூடிய குற்றச் செயலா உண்மையை உள்ளவாறு சொல்லத் தயங்குவதற்கு.?

Image may contain: outdoor

எது எவ்வாறும் இருக்கட்டும். எமக்கு கிடைத் தகவலின் பிரகாரம் யதார்த்தம் இதுதான். இலங்கை மின்சார சபையின் பிரதேச பொறியிலாளர் பிரிவில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சமயா சமய (Casual Basis) அடிப்படையில் மின் மாணி வாசிப்பாளர்களாகக் கடமையாற்றியவர்களை நிரந்தர சேவைக்கு உறுஞ்சப்படுவதற்கான நேர் முகப் பரீட்சை நடைபெற்றபோது அந்த சமயா சமய உழியர்களில் பலருக்கு க.பொ.த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் ஒரே முறையில் திறமை சித்தியின்‌மை காரணமாக அவர்கள் நிரந்தரப் பதவிக்கு உள்வாங்கப்படவில்லை. ஆயினும் இலங்கை மின்சார சபை அந்த ஊழியர்கள் கைவிட்டு விடவில்லை. அவர்கள் தொழிலாளர் (Labourer) மட்டத்தில் நிரந்தர ஊழியர்களாக உங்வாங்கப்பட்டு விட்டார்கள். ஆயினும் அத்தகையவர்களின் மின் மாணி வாசித்தல் பதவிக்கு மாற்றீடுகள் செய்யப்படவில்லை.

கத்தோலிக்கர்களின் மொழியில் சொல்வதானால் இந்த பாவத்துக்காக நகர மின் நுகர்வாளர்கள் ”சிலுவையைச் ” சுமக்க வேண்டிய நிலை.
இதன் தாக்கத்தின் பாரதூரத்தை இன்னும் நகர மின் நுகர்வாளார்கள் சரிவர புரிந்து கொள்ள வில்லை. ”மின் மாணி வாசிப்பாளர் வீடுகளுக்கு வருவதில்லை” என்று சாதாரணமாகப் பேசுகிறாரகள். மின் மாணி வாசிக்கப்படும்போதே முந்திய மாத்துக்கான சிட்டை வழங்கப்படுவது வழக்கம். மின் மாணி வாசிப்பாளர்களுக்கான கல்வித் தகைமையீனம் காரணமாக பலர் அப் பதவிகளை இழந்ததால் 30 ஆயிரம் மின் சிட்டைகள் பட்டுவாடாச் செய்யப்படாது தேங்கிக் கிடப்பதாக எமக்குத் தகவல் தந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.

எனவே ஒரு மாதத்துக்கொருமுறை மின் சிட்டைகள் வழங்கி, இரண்டு மாதத்துக்கொருமுறை மின் மாணி வாசிக்கும் மாற்றுத் திட்டம் ஒன்றை புத்தளம் பிரதேச பொறியிலாளர் அலுவலகம் செய்து வருவதாகத் எமக்குத் தகவல் கிடைக்கின்றன. சரிதான். அந்த புதிய முறை மூலம் இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிர‌தேச பொறியிலாளர் அலுவலகத்தின் பழு என்னவோ குறைவடையலாம். ஆனால் இரண்டு மாததுக்கு அதிகரிக்கும் மின் கட்டணத்தின் பாரம் ………………….?

இது இவ்வாறிருக்க நமது சமுகத்தின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு ஒரு அசௌகரியம் ஏற்படுவதாயும் அறிவிக்கப்படுகிறது. புத்தளம் குருநாக்கல் வீதியில் தபால் நிலையத்தை நோக்கி நின்று இரு புறமும் பார்த்தால் வலது கைப் பக்கம் சிலந்திக் கூடுகள் போல காணப்பட்ட மின் கம்பிகள் அகற்றப்பட்டு நேர்த்தியாக பாதுகாப்பான ஒற்றைக் கம்பி இழுக்கும் வேலை இந்த நாட்களில் இரவு நேரங்களில் நடைபெறுகிறது.

ஊழியர்கள் இரவோடு இரவாக அந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். இப்போது இடப்பக்கமாகத் திரும்பிப் பாருங்கள் அந்த மின் சம்பி சிலந்தி வலை அப்படியே இருக்கிறது. ஒரு மின்சார ஊழியர் தந்த தகவலின் படி அந்த அபிவிருத்திப் பணிக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆயினும் அந்த பக்கத்தில் உள்ள வியாபாரிகள் தமது கடைகயில் ஒரு அங்குலத்தைதானும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால் அந்த மின் கம்பிச் சிலந்தி வலை அப்படியே தான் இருக்கிறது.

ஒரு தீர்வு எட்டப்படாவிட்டால் அப்படியேதான் இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கவும் போகிறது.

இந்த மாதரியான பாதுகாப்பற்ற மின் கம்பிச் சிலந்தி வலைகள் காரணமாகவே அடிக்கடி மின் ஒழுக்குத் தீ விபத்து ஏற்படுகிறது என்பதை பொறுப்பாளர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

பூணைக்கு மணி கட்டுபவர்கள் யார்? பூனைக்கு மணிக்கட்டப்போய் அடுத்த தேர்தலின் அதன் பிரதிபலிப்புக்கு முகங் கொடுப்பவர்கள் யார்?

நியூட்டன் ஐசக்

Leave a Reply

Your email address will not be published.