புத்தளத்தில் குப்பைக் கொட்டுவதற்காக 4 ரயில் எஞ்சின்கள் கொள்வனவு – புத்தளத்து குப்பைகளை கொட்டுவதற்கு டெக்டர் போதாது என்கிறது UC

· · 541 Views
கொழும்பு களணியிலிருந்து புத்தளம் அருவக்காலு பகுதிக்கு திண்மக்கழிவுகளை கொண்டுசெல்வதற்காக நான்கு புகையிரத என்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்திணைக்களத்துக்கான புகையிரத என்ஜின்களை பெற்றுக்கொள்ளும் கொள்முதல் முறையின் கீழ் கொள்வனவு செய்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதே வேலை புத்தளம் நகரின் குப்பைகளை அகற்றுவதற்காக பாவனையில் இருந்த ஆறு  டெக்டர் வண்டிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக நகர சபை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை சபை செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.