புத்தளத்தில் இனிமேல் அடிக்கடி கரண்ட் கட் ஆகாது..!! புதிய வயர்கள் போடும் வேலைகள் ஆரம்பம் – 100 C.E.B. டெக்னிசியன்கள் களத்தில்

· · 859 Views

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகரில் பழைய மின்மாற்றிகளுக்குப் பதிலாகப் புதிய மின்மாற்றிகளும் மின்கம்பிகளுக்குப் பதிலாகப் புதிய பாதுகாப்பு  மின் வயர்களும் பொருத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

powermm

புத்தளம் நகரில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும்  எனவே, இதற்குத்  தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட்; பதியுதீனிடம் முன்னாள் புத்தளம் நகரசபை உறுப்பினரும் அ.இ.ம.கா மத்திய குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து, புத்தளம் நகரில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டியவின் கவனத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொண்டு வந்ததுடன்,   அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  மின்சக்தி அமைச்சர், இலங்கை மின்சாரசபையின் பொது முகாமையாளர் மற்றும் வடமேல் மாகாண மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்து, உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு பணித்தார்.

இதற்கமைய, குளியாப்பிட்டியிலிருந்து புத்தளம் நகரில் மின்மாற்றிகள், புதிய பாதுகாப்பு மிக்க மின் வயர்கள் பொருத்தும் நடவடிக்கையில், 5 குழுக்களைச் சேர்ந்த 100 க்கும்  அதிகமான மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை காரணமாகப் புத்தளம் நகரில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.