புத்தர் கூறியது போல இறைச்சி வர்த்தகத்தை நிறுத்தவே கடையை குத்தகைக்கு எடுத்தோம் !!மாட்டிறைச்சி தேரேர் வியாக்கியானம் – மாகாண ஆணையாளருக்கு போகும் விடயம்

· · 720 Views

சிங்களத்தில்:- முதிதா தயானந்த, பந்து தம்பவிட (லங்காதீப)
தமிழில்:- ஏ.எல்.எம்.சத்தார்.

பெளத்த  பிக்கு ஒருவர் மாட் டிறைச்சிக் கடையொன்றை நடத்துவதற்கான விலைமனுச்செய்து அதனைப் பெற்றுக்கொள்வதென்றால் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விடயமாகும்.

 

இத்தகைய சம்பவம் ஒன்று மத்துகமையில் இடம்பெற்றுள்ளது.

 

 

 

மத்துகம மஹகளு பஹன சேலதலாராம விகாரையைச் சேர்ந்த மாவிட்ட ஞானரத்ன தேரர் என்பவரே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மேற்படி இறைச்சிக் கடை டென்டரின் கதாநாயகனாவார்.

 

 

 

மத்துகம பிரதேச சபையால் நடாத் தப்படும் பொதுச்சந்தை தொகுதியிலுள்ள இறைச்சிக்கடையை 2018 ஆம் ஆண்டு நடாத்துவதற்கான விலைமனு கோரப்பட்டிருந்தது. இதற்காக இரண்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந் தன. மேற்படி பிரதேச சபை செயலாளர் அசோக்க ரணசிங்க குறித்த தினத்தில் கேள்வி மனுக்களைத் திறந்து பார்த்த போது, அவற்றில் ஒன்று இதுவரையில் டென்டர் ஊடாக இறைச்சிக் கடையை நடாத்தி வந்தவர் அவர் 2716000 ரூபாவுக்கு கோரியிருந்தார்.

 

 

 

அடுத்தவரான பிக்கு 3225,622 ரூபா குறிப் பிட்டிருந்தார். இதனால் கூடுதலான தொகையில் கோரப்பட்டவருக்கு வழங்குவதுதான் விதிமுறை அதற்கமைய சம்பந்தப்பட்ட பிக்குவுக்கே 2018 ஆம் ஆண்டு இறைச்சிக்கடையை நடத்தும் பொறுப்பு சென்றடைந்தது.

 

 

 

 

பிக்கு ஒரு வரால் இறைச்சிக்கடை வழிநடத்தப் போவது குறித்து பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் குறித்த பிக்குவால் தெரிவிக்கப்பட்ட கருத்து மற்றொரு ஆச்சரியத்திற்கு வழிவகுத் துள்ளது. அவரது கூற்றில்,

 

 

 

“தெற்காசியாவில் மிகவும் பெரிய புத்தர் சிலை அமையப்பெற்றுள்ள புனித பூமியாகத் திகழ்வது மத்துகம நகராகும். 2015 ஆம் ஆண்டிலிருந்து இங்கு மாட்டிறைச்சிக் கடை நடத்தக் கூடாது என்று பெளத்த பிக்குவால் பிரதேச சபைக்கு கோரிக்கை முன்வைக் கப்பட்டது எழுத்து மூலமும் அறி வித்தல் கொடுக்கப்பட்டது. ஆனால், உள்ளூராட்சி சட்டதிட்டங்களுக்கமைய அவ்வாறு தம்மால் நிறைவேற்ற முடியா திருப்பதாக பிரதேச சபை அதிகாரிகள் கையை விரித்து விட்டனர்.

 

 

 

இங்கு வாரத்தில் இரண்டு தினங்கள் பொதுச்சந்தை நடைபெறுகின்றன அவ்விருதினங்களும் நாள் ஒன்றுக்கு இரண்டு மாடுகள் வீதம் நான்கு மாடுகள் அறுக்கப்பட்டு விற்பனையாகின்றன ஏனைய நாட்களில் எத்தனை மாடுகள் விற்கப்படுகின்றன என்பதை நான் அறியேன்.

 

 

எனவே மாடுகள் கொல் லப்படுவதை தடுத்து நிறுத்தவே நாம் முயற்சித்து வருகிறோம். அந்த அடிப்ப டையிலேயே நான் இந்த டென்டரைக் கோரியிருந்தேன்.

 

 

மத்துகம புத்தசாசனங் களின் அதிபதி ஊரகஹ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட தலைமை பிக்குமார்கள் பலரும் இந்த விடயம் குறித்து எனக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள், ஆசிர்வதித்தார்கள்.

 

 

நாம் எந்த விதத்திலாவது குறித்த பணத்தொகையைச் செலுத்தி எப்படியும் இறைச்சிக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று சம்பந்தப்பட்ட பிக்கு தெரிவித்துள்ளார்.

 

 

சில வருடங்களுக்கு முன் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி இறைச்சிக் கடைகளை இல்லாமலாக்குவதற்காக உள்ளூராட்சி மன்றங்களிடம் யோச னையொன்றை முன்வைத்தது.

 

 

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்கள் மேற்படி பிரேரணையை நிறைவேற்றி இறைச்சிக் கடை இயங்குவதை இல்லாது செய்தன. ஆனால், பெரும்பாலான மன்றங்களில் அங்குள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக அமுல்படுத்த முடியாது போனது.

 

 

இதனை எதிர்த்தவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப் பிலுள்ள இறைச்சிக்கடைகளை மூடி னாலும் ஏனைய வர்த்தக நிலையங்கள் குறிப்பாக சுப்பர் மார்க்கட் நிலையங் களில் இறைச்சி விற்கவே செய்கின்றன அவ்விடங்களில் தடை செய்வது சாத்தி யமல்ல என்றும் உள்ளூராட்சி மன்றங்க ளுக்கு பெருந்தொகையான வருமானம் கிடைப்பது இறைச்சிக் கடை டென் டர்கள் மூலமே என்பதால் இந்த ஆதாயத்தினை இழப்பது நல்லதல்ல என்ற கருத்துகளையே எதிர்வாதம் புரிந்தோர் முன்வைத்திருந்தனர்.

 

 

மாடுகள் மாத்திரமா உயிரினம் ஏனைய உயிரினங்கள் கொல்லப்படுவது நியாயமா என்ற வாதங்களை முன் வைத்தோரும் உள்ளனர் பெளத்த பொருளாதார முறைமையில் பொருளிட்டுவதற்காக தொழில் ஒன் றிலோ அல்லது வர்த்தகத்திலோ ஈடுபடும்போது அதில் தார்மீகமாக செயற்பட முடியுமா என்பதையே பிரதானமாகப் பார்க்க வேண்டும்.

 

 

அத்துடன் பிறருக்கோ தனக்கோ தீங்கு விளைவிக்காத ஐந்து வகையான பொருளிட்டல் முறைகள் புத்த பெருமானால் காட்டித் தரப்பட்டுள்ளன. அவை, விவசாயம், வர்த்தகம், விலங்குகள் வளர்ப்பு வில் கலை, அரச பணி, வித்தைக் கலை என் பனவாகும்.

 

 

அதே போன்று பொருளீட்டுவதற்காக செய்யக்கூடாத ஐந்து வழிகளையும் புத்த பெருமானினால் போதனை செய்யப்பட்டுள்ளது. அவை, விஷத் திரவியங்கள் விற்பது ஆயுத விற்பனை, இறைச்சி வியாபாரம், மதுபான வர்த் தகம், அடிமை வியாபாரம் என்ற ஐந்துமே புத்தர் தடை விதித்துள்ளார்.

 

 

புத்த பெருமானின் மேற்படி போதனைகளுக் கமைய மாட்டிறைச்சி வியாபாரம் மட்டுமல்ல எல்லா இறைச்சி வகைகளும் விற்பனை செய்வதில் நின்றும் தவிர்ந்து கொள்ளவேண்டும். அத்துடன் மேலே கண்ட புத்தர் தடுத்துள்ள ஏனைய வியா பாரங்களில் ஈடுபடவும் முடியாது.

நிலைமை இவ்வாறிருக்க மத்துகம புத்தசாசன அதிகாரசபை மாட்டிறைச்சிக் கடையை மாத்திரம் மூடச்செய்வதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது ஏன் என்று மேற்படி அதிகார சபையின் அதிபதியும் களுத்துறை மாவட்டம் மற்றும் பெந்தர வளலாவிட கோரளையின் மகாநாயக் கருமான ஊரஹக சிறிதம்ம தேரரிடம் வினவினோம்.

அதன்போது அவர் கூறி யதாவது,

பெளத்தர்களாகிய நாம், மாடுகள் கொல்லப்படுவதற்கு மட்டுமன்றி சகல உயிரினங்களையும் கொல்வதற்கு எதி ரானவர்கள்தான். எமது நாட்டில் நீண்ட காலமாகவே இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதை நாம் நிராகரித்தே வந்துள்ளோம். ஆனால், காட்டு யானை அல்லது வேறு வன விலங்குகள் கொல்லப்பட்டால் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால், மனிதர்களை விடவும் அதிக சேவைகள் வழங்கும் மாடொன்றைக் கொல்வதற்கு எத்தகைய இடையூறுகளும் இல்லை அனுமதிப்பத்திரத்தின் மூலம் சர்வசாதா ரணமாக மாடுகள் அறுக்க வாய்ப்பேற்ப டுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று இந்நாட்டிலிருந்து மாடுகள் அறுக்கப்படுவதை ஒழித்துக் கட்ட வேண்டிய இன்றியமையாத தேவை எமக்கிருக்கிறது.

இதேபோன்றே எமது முன்னெடுப்புக்களால் தான் மத்துகம நகரில் இன்று வரையும் மதுபானக் கடையொன்றேனும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார் மகாநாயக்க தேரர் டென்டர் மூலம் எடுத்து இறைச்சிக் கடையை மூடும் யோசனை குறித்து மத்துகம பிரதேச சபையின் செயலாளர் அசோக ரணசிங்ஹவிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது குறிப்பிட்ட இறைச்சிக் கடையை மூடச் செய்யும் படி பிக்குமார்கள் உள் ளிட்ட கோஷ்டியினர் மிக நீண்ட கால மாக எம்மிடம் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

அவ்வாறு மூடுவதற்கு எமக்கு அதிகாரமில்லை. பிரதேச சபைக்கு மிகவும் பெருமளவிலான வருமானத்தை ஈட்டித் தரும் வழி ஒன்றைத் தடை செய் வதில் எமக்கு சட்ட ரீதியான பிரச்சினை எழுகிறது. இதனால் மேற்படி கோரிக் கையை நாம் உள்ளூராட்சி ஆணையாள ரிடம் சமர்ப்பித்துள்ளோம். பெளத்த பிக்கு ஒருவர் இறைச்சிக் கடையொன்றை கேள்விப்பத்திரம் மூலம் கோரியிருப்பது கண்டு நாம் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தோம்.

இதனை மூடும் எண்ணத்திலே தான் பெற்றுக்கொண்டதாக ஊடகங்கள் வாயிலாகத்தான் நாம் அறிந்து கொண்டோம் கேள்விமனு சமர்ப்பிக்கும் போதான பிணைப்பணம் வைப்பு நிபந்தனையின் படி உரிய வர்த்தக நிலையம் டென்டரில் கிடைக்கப் பெற்றதும் ஏழு தினங்களுக்குள் அது திறக்கப்பட்டு இயங்காது போனால் ஒப்பந்தம் செல்லுபடியற்றுப்போகும்.

அத்துடன் இது மூடப்படப்போவது குறித்து இதுவரை எமக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கப் பெறவும் இல்லை. எனவே, இப்போது உருவாகியுள்ள சூழ்நிலையில் மேற்படி விடயம் உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவரது ஆலோசனையைப் பெற உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published.