புது எஜமானை வரவேற்க தயாராகும் புத்தளம் நகர சபை !! பெயிண்டெல்லாம் அடிக்கிறார்கள்

· · 1703 Views

தமது புதிய நகர சபைத் தலைவரை வரவேற்க புத்தளம் நகர சபை பம்பரமாக சுழன்று வேலை செய்வதாக வைட் பீரோ செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

புதிய தலைவருக்கான அறைக்கு புதிதாக நிறத் தீந்தைகள் பூசப்படுவதொடு  புதிய கேட்டன்களும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

அத்தோடு இந்த முறை நகர சபையில் பெரும் பட்டாளமாக உறுப்பினர்கள் செல்ல இருப்பதால் மேலதிகமான  கதிரைகளும் தயார் செய்யப்படுகின்றது.முன்னைய பாரம்பரிய முறையிலான கதிரைகளே  தயார் செய்யப்படுகின்றன.

 

 

 

 

 

இதற்கிடையில்  அங்கு இத்தனைக் காலமும் கண்ணா பின்னாவென துவேஷ ஆட்சி செய்து கொண்டிருந்த அதிகாரிகள் தற்போது உறுப்பினர்களாக தெரிவாகி இருக்கும் கே.ஏ. பாயிஸ்  மற்றும் M.S.M. ரபீக் ஆகியோர் மீது பெரும் பயத்துடன் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறின.

 

 

 

 

 

தான்தோன்றித்தனமான  நிர்வாகம் மேற்கொண்டு நகர சபையின் பணத்தை  முடக்கியதோடு  முழுதும் பிரதி அமைச்சர் ரங்கா பண்டாரவுக்கான தேவைகளையும் அவரின் கட்டளைகளையும் அமல்படுத்திக் கொண்டிருந்த அங்குள்ள உயர் அதிகாரிகளே தற்போது நடுக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

 

முன்னாள் பிரதி அமைச்சர் கே. ஏ.பாயிஸ்  தலைவராக செய்யபடுவார் என்ற அச்சத்தில் சிலர் வேறு இடங்களுக்கு செல்லுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அறியக் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.