புதிய தேர்தல் முறைமை கற்றுத்தரும் பாடம் : “ஊழலுக்கோ, சம்பாத்தியதிற்கோ வழி வைக்காத அரசின் கெட்டிக்கார முறைமை

· · 411 Views

புதிய தேர்தல் முறைமை கற்றுத்தரும் பாடம்………(A lesson learned from mixed electoral system)

இலங்கயில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறை உலக நாடுகளில் நடைமுறையில் இருக்கும் 5 வகையான வேறுபட்ட முறைகளை ஒன்றாகக் கலந்தே செயற்படுத்தப்பட்டது.

 

 

 

 

இதன்காரணமாகவே பல சிக்கல்களும் பாதகமாக விளைவுகளும் ஏற்படுத்தியுள்ளது.உண்மையில் குறித்த ஒருவகை கலப்புமுறைக்கு (mixed system)மேலதிகமாக சிலவற்றை உள்ளடக்கியதே தற்போதைய குழப்பநிலைக்கு காரணமாகும்.

 

 

 

 

நாட்டில் நிலவிய இனமோதல்கள் மற்றும் அளவுமீறிய ஊழலை ஒழிப்பதற்காக தென்ஆபிரிக்கா 2004ல் இந்தக் கலப்புமுறைத் தேர்தலை அறிமுகம் செய்தது.இதன் மூலம் வெற்றியும் கண்டது.

 

 

 

வடகிழக்கில் ஊர்காவல்துறை,முசலி,அக்கரைப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகிய சபைகளில் மட்டுமே தனித்து ஆட்சியமைகும் நிலை உள்ளது.கலப்புத் தேர்தல் முறையானது நிலையானதும் திறமானதுமான நிர்வாகத்திற்கு தடையாக உள்ளது.

 

 

 

போனஸ் ஆசனங்கள் தொடர்பில் குளறுபடி நீடிக்கிறது.வெற்றிபெற்ற கட்சிகள் ஆட்சியமைக்க முடியாமலும்,வெற்றிபெறாமல் போனஸ் ஆசனத்தை வைத்து பெற்ற தோல்வியாளர்களை சாதனயாளர்களாக்கி உள்ளது.

 

 

 

 

 

ஆகவே நாட்டில் தேசிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி,உள்ளூராட்சி மன்றங்களிலும் இழுபறி நிலையைத் தோற்றுவித்துள்ளது.

 

 

 

 

உண்மையில் மேற்கத்திய நாடுகளில் பிரதேச மட்டங்களில் இருந்து புதிய மற்றும் ஊழலற்ற தலைவர்களை உருவாக்கவும்,சகல கட்சியினரையும் பிரதேச அபிவிருத்தியில் பங்காளர்களாக செயற்படவுமே இந்த கலப்புமுறைத் தேர்தல் உருவாக்கப்பட்டது.

 

 

 

 

ஆனால் தனிக்கட்சி மற்றும் நபர்களால் ஊழல்களையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் செய்கின்ற நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு இது சிக்கலாக உள்ளது.ஏனெனில் சகலகட்சிகளையும் அரவணைத்து மற்றும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட முடிவாக உள்ளது.

 

 

 

 

தாங்களே வெற்றியாளர்கள்,தாங்களே அதிகாரமிக்கவர்கள்,தாங்களேகொந்த்துராத்துக்களையும் வசதிகளையும் ஆட்டைபோட வேண்டுமென எந்தக் கட்சியும் நினைக்கவோ,செயற்படவோ முடியா.

 

 

 

 

மக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்தலில் நின்றவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என்பதே கலப்புமுறைத் தேர்தலில் இலக்காகும்.ஆட்சியை மற்றவர்கள் துணையுடன் எவரும் ஊழல் புரியமுடியாமல்( corruption free)நிர்வாகத்தை நடாத்த வேண்டும் என்பதே கலப்புமுறைத் தேர்தலின் நோக்கமாகும்.

 

 

 

 

 

இதனால் தான் தனிநபருக்கான விருப்பு வாக்குரிமை ஒழிக்கப்பட்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவும்,சகல வட்டாரங்களுக்கும் ஒப்பீட்டளவில் பிரதிநிநிகள் கிடைக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது.

 

 

 

 

ஆகவே சமூக நோக்குடையவர்கள் இணைந்து எந்த சபையிலும் ஆட்சி நடாத்தலாம்.மாறாக ஊழல் மற்றும் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்களுக்கு புதிய தேர்தல்முறை ஏமாற்றமே.

 

By : மாஹிர் அசனார்

Leave a Reply

Your email address will not be published.