புதிய உள்ளு : கடையாமோட்டையின் வட்டார உறுப்பினரானார் பைசர் மரைக்கார் !! எஹியாவின் கோட்டை – S.L.M.C. க்கு நாலாவது இடம்

· · 635 Views
கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் கடையாமோட்டை, கணமூலை வடக்கு, தெற்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கடையாமோட்டை வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

குறித்த வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அ.இ.ம.காங்கிரஸ் வேட்பாளரான பைஸர் மரிக்கார் 1202 வாக்குகளைப் பெற்று பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 

அத்துடன், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினராக இருந்த அபுல் ஹசன் முஹம்மது ரிஸ்வி, இம்முறை தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பிரதேச சபைக்கு தெரிவாகவில்லை.

 

இந்த வட்டாரத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 1036 வாக்குகளும், கை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 408 வாக்குகளும், மரச் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு 345 வாக்குகளும், வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய சமாதான ௯ட்டமைப்புக்கு 179 வாக்குகளும் கிடைத்துள்ளன.

 

 

 

 

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அபுல் ஹசன் முஹம்மது ரிஸ்வியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அப்துல் முனாப் அஸ்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முஹம்மது ஹனீபா முஹம்மது ரிஸ்லியும் போட்டியிட்டனர்.

 

 

 

 

அத்துடன், குறித்த வட்டாரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவியது.

 

 

 

இந்த நிலையிலேயே, குறித்த வட்டாரத்தில் 166 மேலதிக வாக்குகளினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

 

 

 

 

 

குறித்த வட்டாரத்தில் 3203 பேர் வாக்களித்துள்ளதுடன், அதில் 11 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன் ,  3192 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக கணக்கெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– முஹம்மட் ரிபாக்
By :  LR

Leave a Reply

Your email address will not be published.