புதிய அரசமைப்போ, தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்களோ தேவைப்படவில்லை என அஸ்கிரிய மல்வத்து பீடங்கள் அதிரடி அறிவிப்பு !! சிக்கலில் அரசாங்கம்

· · 599 Views

இலங்கைக்கு, புதிய அரசமைப்போ அல்லது தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்களோ தேவைப்படவில்லை என, மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த சபை, நேற்று (18) தீர்மானமெடுத்துள்ளது.

 

 

புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்த முடிவை, மகாநாயக்க தேரர்கள் எடுத்துள்ளனர்.

 

 

புதிய அரசமைப்பு, இலங்கைக்குப் பொருத்தமற்றுக் காணப்படுகிறது எனத் தெரிவித்த அச்சங்கம், தற்போதைய அரசமைப்பு, இலங்கைக்குப் பொருத்தமானதாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளதோடு, புதிய அரசமைப்பை வரையும் பணிகளை நிறுத்துமாறும் கோரியுள்ளது.

 

 

 

ஏற்கெனவே, இவ்வாண்டு ஜூலை 4ஆம் திகதி ஒன்றுகூடியிருந்த 3 பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்களும், இலங்கையில் புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்பில் மாற்றங்களோ தேவைப்படவில்லை என, ஏகோபித்தமாக முடிவெடுத்திருந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 

 

தற்போது, அதே பாணியிலான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, அரசமைப்புத் தொடர்பில் அழுத்தங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்துக்கு, புதிய அழுத்தங்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.