பீனிக்ஸ் : 2014 ல் தீக்கிரையான NO LIMIT மீண்டும் கம்பீரமாக எழுந்து நின்றது..!! ஒரு Flash back story

· · 877 Views

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி தீ விபத்தில் முற்­றாக எரிந்து சாம்­ப­ரான நோலிமிட் நிறு­வ­னத்தின் பாணந்­துறை காட்­சி­யறை இப்­போது மீண்டும் பீனிக்ஸ் பறவை போல புதுப்­பொ­லிடன் கம்­பீ­ர­மாக எழுந்து நிற்­கி­றது.

nolimte

குறித்த பாணந்­துறை காட்­சி­யறை நேற்று முன்­தினம் அதன் உரி­மை­யா­ள­ரான என்.எல்.எம்.முபாறக்கினால் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

பாணந்­துறை காட்­சி­ய­றையே இலங்­கையின் நீண்ட சங்­கிலித் தொடர் காட்­சி­ய­றை­களைக் கொண்ட நோலிமிட் நிறு­வ­னத்தின் ஆகக் கூடு­த­லான பரப்­ப­ளவைக் கொண்ட கிளை­யாகும்.

2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு அது பற்­றிய அச்சம் நீங்­கி­யி­ராத சந்­தர்ப்­பத்தில் சரி­யாக ஒரு வாரம் கழித்து பாணந்­து­றையில் அமைந்­தி­ருந்த மேற்­படி நோலிமிட் வர்த்­தக நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. இதன் மூலம் சுமார் 40 கோடி ரூபா நஷ்டம் ஏற்­பட்­ட­தாக அச் சமயம் தெரி­விக்­கப்­பட்­டது.

21.06.2014 சனிக்­கி­ழமை அதி­காலை 3 மணி­ய­ளவில் இச் சம்­பவம் இடம்­பெற்­றது. எனினும் 4 மணி நேரத்தின் பின்­னரே தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முடிந்­தது.

இந்த தீ அனர்த்­த­மா­னது விபத்தா அல்­லது இன­வா­தி­களின் சதி நட­வ­டிக்­கையா என்­பது பற்றி இந்த இரண்டு வருட காலத்­திலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

எனினும் இது ஒரு நாச­கார செயலே என அச் சமயம் பலத்த சந்­தேகம் வெ ளியி­டப்­பட்­டது. இதற்­கான பிர­தான ஆதாரம் முற்­றாக எரி­யுண்ட நோலிமிட் பாணந்­துறை கிளை கட்­டி­டத்­திற்கு வெ ளிப்­பு­ற­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயில் எரிந்­த­மை­யாகும்.

என­வேதான் வெ ளியி­லி­ருந்து வந்த ஒரு சாராரே மோட்டார் சைக்­கி­ளுக்கும் கட்­டி­டத்­துக்கும் தீ மூட்­டி­யி­ருக்க வேண்டும் எனும் சந்­தேகம் வலு­வாக முன்­வைக்­கப்­பட்­டது.

எனினும் இந்த விட­யத்தில் நோலிமிட் நிர்­வாகம் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தவோ அல்­லது சூத்­தி­ர­தா­ரி­களை கண்­ட­றி­யவோ அழுத்­தங்­களை வழங்க விரும்­ப­வில்லை.

அத்­துடன் அன்­றைய ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களும் இந்த சம்­பவம் குறித்த விசா­ர­ணை­களைக் கிடப்பில் போட வழி­வ­குத்­தன.

இந் நிலை­யில்தான் தற்­ச­மயம் கடந்த பல மாதங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட புன­ர­மைப்பு பணி­களின் பின்னர் மீண்டும் நோலிமிட் பாணந்­துறை கிளை திறக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.


சஹீத் அஹமட் , அஸ்ரப் ஏ ஸமத், எம் .அம்ஹர்: 

நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இன்று (21) அதிகாலை இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு (படங்கள், Video)

படையினர் கொண்டுவந்த தண்ணீர் போதாமை காரணமாகவே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர்களால் முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது .

முழு கட்டடத்ததையும் காலை 5.30 க்கு தீ முழுமையாக  சாம்பராக்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தீ பரவியவேளையில் அந்த கட்டடத்திலிருந்த எழுவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

இன்று அதிகாலை 3 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீ வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது 3 மணியளவில் தனக்கு தொடராக 6 வெடிச்சத்தங்கள் கேட்டதாக, குறித்த கட்டடத்துக்கு அருகாமையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும் எனத் அமைச்சர் ஹகீம் தெரிவித்தார்

 ரவூப் ஹக்கீம் அமைசச்ர் ரெஜிநோல் குரேஸ் தலத்திற்கு விஜயம்

நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவத்தை பார்வையிட்டார். அத்துடன், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரேவும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் – நாங்கள் அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளோம். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்

பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர்:-  ரெஜிநோல் குரே

அமைசச்ர் ரெஜிநோல் குரே – இது பாணந்துறையிலும் முஸ்லிம் பௌத்த மக்களது இனஜக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும் பாணந்துறையில் பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.என தெரிவித்தார் .

சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர்

 ஸ்தலத்துக்குச் சென்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க  சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேல் மாகண பிரதிப் பொலிஸ் மா அதிபர்   ஆகியோரும்  சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர். அவர்கள் அவசர விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். அரச இரசாயன பகுப்பாய்வாளரை இதில் ஈடுபடுத்திக் கொள்ளவும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்

விசேட அதிரடிப்படை நிறுத்தப் பட்டுள்ளது

பாணந்துறையில் விசேட அதிரடிப்படையினர்(எஸ்.டி.எப்)  அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர் . பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலையம் (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்தே மேலதிக  விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பலின் நடமாட்டம் 

 கடந்த 17 ஆம் திகதி இரவு பாணந்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பல் நடமாடியதால் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு போலிஸ் குறித்த பகுதில் நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

நோ-லிமிட் மிகப்  பெரிய வியார ஸ்தாபணமாகும் 

சாம்பலாகியுள்ளது. நோலிமிட்டின் மிகப் பெரிய வியார ஸ்தாபணமாகும்  கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்  சொந்தக்; கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் அதன் அருகில் உள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மணித்து கொடுத்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்.

இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர்.

ஜனாதிபதியை முஸ்லிம் அமைச்சர்கள் அவரசமாக சந்திக்க ஏற்பாடு

தற்போது  பதுலளையில் இருக்கும் ஜனாதிபதியுடன்  விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த விசேட ஹெலிஹொப் டர்கள் மூலம்   முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகிறது . அமைச்சர் ஹக்கீம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிய முடிகிறது.

5

10

1

Leave a Reply

Your email address will not be published.