பிளேன்டி 5/=, டீ 10/=, ப்ரைட் றைஸ், கொத்து 10/= அதிகரிக்க ஹோட்டல் சங்கம் முடிவு !!

· · 1045 Views

ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

kottu

எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

இதன்படி தேனீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவினாலும், உணவுப்பொதிகள், ப்ரைட் றைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் பத்து ரூபாவினாலும் உயர்த்தப்படவுள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படுவதனால் மதாந்த நீர்க் கட்டணங்கள் சுமார் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் டிசம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக கொழும்பின் அனைத்து ஹோட்டல்களும் ஒருநாள் மூடி எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ரோல்ஸ், பனிஸ் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி ஹோட்டல் உரிமையார்கள் சங்க தேசிய சம்மேனத்தில் விலை அதிகரிப்பு குறித்து நிர்ணயிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.