பிரியங்கர ஜெயரட்ன பதவி விலகினார்..!! மேலும் 10 S.L.F.P. உறுப்பினர்கள் விலகப்போகிறார்கள்..!!பிழைக்குமா நல்லாட்சி..? பிரியங்கர ஏன் விலகினார்..?

· · 1573 Views

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு, இந்தியாவுடன் செய்து கொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கை, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவுக்கு விற்பனை செய்யும் தீர்மானம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேசப்படுகின்றது.

ranil_maithri_sad

அத்துடன் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

காலியை சேர்ந்த இருவர், கம்பஹா சேர்ந்த இருவர், குருணாகல், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரே இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் இந்த அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


பிரியங்கர ஏன் பல்டி அடித்தார்..?

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சரும், தற்பொழுது குறித்த அமைச்சின் பதில் அமைச்சருமான பிரியங்கர ஜயரத்ன தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (30) பிற்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த இராஜாங்க அமைச்சர் தனது பதவி இராஜினாமா குறித்து கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியினால் அவரின் இராஜினாமா மறுக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும்  கடமையாற்றுவதாகவும், ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சுப் பதவியொன்று கிடைத்தால் அதனை பொறுப்பேற்கவுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலான சிக்கல் நிலை, இவரது இராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் இவரின் இராஜினாமா அரசாங்கத்தின் ஒர் ஏற்பாடாக இருக்கலாம் எனவும் அரசியல் மட்டத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.